வாழை நாரில் கண்ணைக் கவரும் புடவை.. சாய் காயத்ரி செய்த பர்ச்சேஸ் - வைரலாகும் வீடியோ!
வாழை நாரில் புடவையை பார்த்து வியந்து போய் உள்ளார் நடிகை சாய் காயத்ரி.
தமிழ் சின்னத்திரையில் ஈரமான ரோஜாவே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் காயத்ரி. இந்த சீரியலை தொடர்ந்து இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இவரின் கதாபாத்திரம் நெகட்டிவாக மாற சீரியலில் இருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார். மேலும் விரைவில் சீரியலிலும் என்ட்ரி கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சாய் காயத்ரி சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.
ஆயிரம் ரூபாய்க்கு மூன்று புடவை, குறைந்த விலையில் பட்டுப் புடவைகள், விதவிதமான மாடர்ன் டிரஸ் என அனைத்தையும் பார்த்து வியந்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் வாழை நாரியில் உருவாக்கப்பட்ட புடவையை கண்டு வியப்படைந்துள்ளார். இவருடைய இந்த ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.