காதலில் விழுந்த சாய் பல்லவி… 10 ஆண்டு கால லவ்வர் இவர்தானாம்.. அப்செட்டில் ரசிகர்கள்

#image_title
Sai pallavi: நடிகை சாய் பல்லவி தன்னுடைய காதலர் குறித்து தெரிவித்து இருக்கும் ஆச்சரிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் அய்யோ போச்சே எனவும் வருத்தத்தில் உள்ளனர்.
விஜய்டிவி ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அவரை முதலில் நாயகியாக எண்ட்ரி கொடுத்தவர் அல்போன்ஸ் புத்திரன்தான். பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்தார். ஆனால் அப்படம் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ் ரசிகர்களையும் கட்டி போட்டது.
இதையும் படிங்க: அந்த ஒரு படத்தில் நடிச்சதால 23 பட வாய்ப்பை மிஸ் பண்ண நடிகை! இப்ப அவங்க நிலைமை?
சாய் பல்லவிக்கென தனி ரசிகர்களே இணைந்தனர். தொடர்ந்தும் அவருக்கு மலையாளத்தில் வாய்ப்பு வந்தது. இதை தொடர்ந்து, தெலுங்கிலும் நடித்துவந்தார். அதையடுத்து தமிழில் ஹீரோயினாக தியா படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் பெரிய அளவில் ஹிட்டடிக்கவில்லை.

sai pallavi
இதை தொடர்ந்து, மாரி2 திரைப்படத்தில் தனுஷுடன் ஹீரோயினாக களமிறங்கினார். அப்படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடினார். அங்கையே அவரின் தமிழ் கேரியர் பீக் எடுத்தது. தொடர்ந்து சூர்யாவின் என்ஜிகே படத்திலும் நடித்தார்.
இதையும் படிங்க: ரஜினியை செருப்பால அடிப்பேன்னு சொன்ன பாலசந்தர்…! நடந்தது இதுதான்..!
இதை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை சாய்பல்லவியிடம் முதல் காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்தவர், மகாபாரதம் கதை எனக்கு ரொம்பவே பிடிக்கும். கதையில் வரும் அர்ஜுனனின் மகன் அபிமன்யு மீது காதலே வந்துவிட்டது. அப்படி பார்க்கும்போது அபிமன்யு தான் என்னுடைய 10 வருட காதலர் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். என்னங்க லவ்வை கேட்ட இப்படி பொசுக்குனு சொல்லி இருக்கீங்க எனவும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.