
Cinema News
இப்படி செஞ்சிட்டிங்களே சாய் பல்லவி.?! ரஜினி பட மெகா ஹிட் இயக்குனரின் நிலைமையை பாருங்க…
ரஜினி நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. திகில் கலந்து கமர்சியல் அம்சங்கள் கொண்டு இப்படம் உருவானது. அந்த திரைப்படம் அப்போது மிகப்பெரிய வெற்றியடைந்தது. குறிப்பிட்ட திரையரங்கில் 800 நாட்களை கடந்து இந்த திரைப்படம் சாதனை படைத்தது.
இத்தனை வருடங்கள் கழித்து தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். அதனையும் பி.வாசு தான் இயக்க உள்ளார்.
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதன் அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த திரைப்படத்தில் கதாநாயகி கதாபாத்திரத்தை விட சந்திரமுகி மிக முக்கியமானது. அதற்காக பல்வேறு நாயகியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
அப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவியிடம் இந்த கதையை பி.வாசு கூறியுள்ளாராம். அப்போது கதையில் பல்வேறு சில இடங்களில் மாற்றம் செய்ய சொல்லி சாய் பல்லவி கூறிக்கொண்டே வந்தாராம். பொறுமையாக கேட்டு கொண்டிருந்த பி.வாசு ஒரு கட்டத்தில் பொறுமை இழந்துவிட்டாராம்.
இதையும் படியுங்களேன் – மீண்டும் புஷ்பாவில் விஜய் சேதுபதி.?! உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா.?! கதறும் ரசிகர்கள்….
படத்தின் இறுதிக்காட்சியை அவர் கூறுகையில் , சாய்பல்லவி அந்த கிளைமாக்ஸ் காட்சியை மாற்ற முடியுமா என்று கேட்டுள்ளாராம். இதனை கேட்ட பி.வாசு அப்செட் ஆகிவிட்டாராம். இந்த படத்தில் சாய் பல்லவி நடிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டு வந்து விட்டாராம்.
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்த பி.வாசுவுக்கு இந்த நிலைமையா? என்று பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் சாய் பல்லவி இப்படி செய்திருக்க கூடாது என்றும் சிலர் சிலாகித்து வருகின்றனர்.