பேசாமல் ஒரு சேரை மேடையிலேயே போட்டு உட்கார்ந்துகங்க… பார்த்திபனைபங்கமாக கலாய்த்த சாய்பல்லவி

 

தமிழக அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த விருதுகள் தற்போது வழங்கப்பட்டன. இந்த விருதுகள் வழங்கும் விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு உதய நிதி ஸ்டலின் தலைமையில் நடபெற்றது. சிறந்த நடிகர்களாக விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோரும், சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய்பல்லவி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருது நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபனுக்கு 10 விருதுகள் வழங்கப்பட்டன. ஒத்த செருப்பு மற்றும் இரவின் நிழல் ஆகிய படங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இதனை கவனித்த சாய்பல்லவி பார்த்திபனிடம் ஏன் நீங்கள் ஸ்டேஜிலேயெ ஒரு சேரை போட்டு உட்கார்ந்துகொண்டு எல்லா விருதுகளையும் வாங்கிய பின்பு இங்கே வரவேண்டியதுதானே என்றூ கிண்டலிடித்துள்ளார். இதனை கேட்ட பார்த்திபன் பயங்கரமாக் சிரித்தார்.இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பார்த்திபன்.

From Around the web