Categories: Cinema News latest news

திடீரென சட்டையை கழட்டி காட்டிய ரசிகர்.! மிரண்டு போன சாய் பல்லவி.!

மலையாளத்தில் வெளியான பிரேமம் எனும் திரைப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை என்றால் அது சாய் பல்லவி தான். இன்னும் சொல்ல போனால், மலர் டீச்சரால் தான் மலையாள சினிமாவை தமிழ்நாட்டு ரசிகர்கள் கவனிக்க முக்கிய காரணமாக மாறியவர் என்றே கூறலாம்.

Also Read

அதன் பிறகு, தமிழில் தியா, தனுஷின் மாரி-2 , சூர்யாவின் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இவரை அங்கு லேடி பவர் ஸ்டார் என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

சாய் பல்லவி, ராணா நடித்துள்ள விராட பருவம் எனும் திரைப்படம் நேற்று வெளியானது. அப்பட விளம்பர நிகழ்வில் கலந்து கொள்ள, படக்குழுவுடன், சாய் பல்லவி சென்றார்.

இதையும் படியுங்களேன் – இங்க வா… அழகாய் பந்து விளையாடும் செல்ல குட்டி கீர்த்தி சுரேஷ்.! ஆனா, மண்ட பத்திரம்….

அங்கு, ஒரு ரசிகர் தனது சட்டையை திறந்து, நெஞ்சில் சாய் பல்லவி முகத்தை பச்சை குத்தி இருப்பதை காட்டினார். இதனை முதலில் பேனாவால் வரைந்துள்ளார் என நினைத்து விட்டார் சாய் பல்லவி. அதன் பின்னர் இல்லை இது நிஜம். நான் வரைந்துள்ளேன் என கூறவே, சாய் பல்லவி மிரண்டுவிட்டார்.

உடனே அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது சட்டையை திறந்தபடி அந்த ரசிகர் இருந்தார். அதன் பிறகு ரசிகர்கள் சாய் பல்லவியை நடனமாட சொன்னார்கள். பிறகு அவர்கள் ஆசைப்படி நடனமாடினார் சாய் பல்லவி.

Published by
Manikandan