அந்த பார்வையில சொக்கி போயிட்டோம்!.. மனதை அள்ளிய சாய் பல்லவி..
மலையாளத்தில் வெளியானாலும் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் பிரேமம். இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சாய் பல்லவி. அதன்பின் மலையாளத்தில் பல படங்களில் நடித்தார். தமிழில் மாரி 2, என்.ஜி.கே. ஆகிய படங்களில் நடித்தார்.
மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தில் இவரும், தனுஷ் சேர்ந்து நடனம் ஆடிய ‘ரவுடி பேபி’ பாடல் யுடியூப்பில் கோடிக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.தமிழ், மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி.
இவரின் தங்கையும் தற்போது சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். தெலுங்கில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது ஷியாம் சிங்கா ரெட்டி மற்றும் விர்ட்டா பர்வம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். சமீபகாலமாக போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.