காசு கொடுத்து பரப்பிய வதந்திகள்… காம் டீச்சரையே கடுப்பாகிய சம்பவம்… அடங்குங்க பாஸ்!
Sai Pallavi: தொடர்ச்சியாக பிஸியாக நடித்து வரும் சாய் பல்லவி மீது சில நாட்களாக பரப்பி வந்த கல்யாண வதந்திக்கு அம்மணி கடுப்பாகி போட்ட ஒரு ட்வீட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2015ம் ஆண்டு வெளிவந்த மலையாளப் படமான பிரேமம் திரைப்படத்தில் எண்ட்ரி கொடுத்தவர் சாய்பல்லவி. நிவின் ஜோடியாக சாய் பல்லவி நடித்த ப்ரேமம் அந்த நேரத்தில் இரண்டாவது அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தத்தெடுப்பதில் இவ்ளோ சிக்கல் இருக்கா?.. ஆர் யூ ஓகே பேபி படம் எப்படி இருக்கு?.. விமர்சனம் இதோ!..
மேக்கப் இல்லாத முகம், நீண்ட முடி என மலையாள ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். அதை தொடர்ந்து அவரை வரவேற்றது தெலுங்கு திரையுலகம் தான். பிடா படத்தின் பானுமதி கேரக்டர் மிகப்பெரிய ரீச்சை சாய் பல்லவிக்கு கொடுத்தது. மற்ற படங்களில் நடித்தவருக்கு தமிழில் தியா படத்தின் மூலம் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
சூர்யாவுடன் என்.ஜி.கே, மாரி 2 படங்களின் மூலம் சாய் பல்லவி நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தெலுங்கில் லவ் ஸ்டோரி, விரட்ட பர்வம், ஸ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில் சாய் பல்லவிக்கும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு திருமணம் நடந்து விட்டதாக ஒரு செய்தி பரவியது.
இதையும் படிங்க: இறைவன் படக்குழுவிற்கு வந்த அதிர்ச்சி நியூஸ்!… என்னங்க ஜெயம் ரவி இப்படி ஆகிப்போச்சே!..
அதுவும் அவரின் ஃபேன் எக்ஸ் அக்கவுண்ட்டில் இருந்தே ஒரு புகைப்படம் பகிரப்பட்ட நிலையில், பலரும் உண்மை எனக் கருதி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் அது சிவகார்த்திகேயனின் 21வது பட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் வதந்திக்கு பதிலளிக்கும் விதமாக சாய் பல்லவி ஒரு போஸ்ட்டினை வெளியிட்டு இருக்கிறார். அதில், நிஜமாக சொல்ல வேண்டும் என்றால் நான் வதந்திகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால், அது குடும்ப நண்பர்களை கொண்டு இருப்பதால், நான் பேச வேண்டும்.
எனது படத்தின் பூஜை விழாவில் இருந்து ஒரு படம் வேண்டுமென்றே க்ராப் செய்யப்பட்டு, பணம் கொடுத்து கேவலமான நோக்கத்தோடும் பரப்பப்பட்டது. எனது புதிய படம் குறித்து மகிழ்ச்சியான அறிவிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, இந்த தேவையில்லாத செயல்கள் அனைத்திற்கும் விளக்கமளிப்பது வருத்தமளிக்கிறது. இது போன்ற தொல்லை ஏற்படுத்துவது முற்றிலும் கேவலமானது! எனக் காட்டமாக தெரிவித்தார்.