
Cinema News
போர் அடிச்சா பர்ஸ்ல இருந்து எடுத்து அத சாப்ட்ருவேன்.! சாய் பல்லவியின் ‘ச்சீ’ சீக்ரெட்ஸ்..,
தமிழில் சின்னத்திரையில் ஒரு நடன நிகழ்ச்சி மூலம் அறியப் பட்டவர் சாய்பல்லவி. அதன் பின்னர் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமா முழுவதும் தெரிந்த நடிகையாக மாறிவிட்டார் சாய் பல்லவி.
தமிழில் தியா, மாரி இரண்டாம் பாகம் போன்ற படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். பல்வேறு இளம் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து முடித்து விட்டார்.
இவர் அண்மையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது தன்னை பற்றிய சில ரகசியங்களை கூறியிருந்தார். அவரது கைப்பையில் என்னவெல்லாம் இருக்கும் என்று தொகுப்பாளினி சாய் பல்லவியிடம் கேட்டவுடன், அதனை வெளிப்படையாக கூறியிருந்தார்.
இதையும் படியுங்களேன் – என்னய்யா கேள்வி கேட்டுகிட்டே இருக்கீங்க.., இந்தா பாத்துக்கோங்க.! ஆதாரங்களை லீக் செய்த சேதுபதி.!
அப்போது எனது கைப்பையில் விபூதி இருக்கும் என கூறினார். உடனே, தொகுப்பாளினி நீங்கள் அடிக்கடி விபூதி இட்டு கொள்வீர்களா? என்று கேட்டவுடன், அப்படியெல்லாம் இல்லை, எனக்கு போர் அடித்தால் அந்த விபூதியை எடுத்து சாப்பிடுவேன் என்று கூறினார்.
உடனே, தொகுப்பாளினி ச்சீ இது என்ன கெட்ட பழக்கம்? அதெல்லாம் சாப்பிடக்கூடாது என கூறினார். அதற்கு சாய் பல்லவி, அப்படி இல்லை இது ஒரு மர வேரின் சாம்பல் அதனால் இதனை சாப்பிடலாம். என்று அவர் கூறி சமாளித்து விட்டு சென்றார். இன்னும் விபூதி சாப்பிடுவதை வெளியில் கூறும் குழந்தையாகவே சாய் பல்லவி இருக்கிறாரே என அவரது ரசிகர்கள் வியப்புடன் பார்க்கின்றனர்.