பெத்தவங்கள பாத்து கேக்குற கேள்வியா இது...! உச்சக்கட்ட கோபத்தில் சாய்பல்லவி...
அடிப்படையில் டாக்டரான சாய்பல்லவி நடனம் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவிற்கு வந்தார். பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நடிப்பு, நடனம் என எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் சாய் பல்லவி தமிழ், தெலுங்கு என மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் உச்சம் பெறவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் தான் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். தமிழில் தனுஷ் மற்றும் சூரியா இருர்வருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நடிப்பதற்கு முன் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அதன் பின்னர் தான் நடிக்க வாய்ப்பு வந்தது.
இவர் தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை தன் சிறுவயதில் பார்த்துள்ளார். படத்தை பார்த்து விட்டு சாய்பல்லவி அவரின் பெற்றோரிடம் போய் நான் சிவப்பாக இருக்கிறேன் நீங்க மட்டும் கருப்பாக இருக்கிறீர்கள் அப்போ என்னை தத்தெடுத்து வளர்த்தீர்களா?என கேட்டுள்ளார்.
அதை கேட்டதும் அவரின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம் பின்னர் அவர்கள் சாய்பல்லவியிடம் உன் தங்கையும் சிவப்பாகத்தானே இருக்கிறாள் இரண்டு பேரும் கூடப்பிறந்தவர்கள் தான் நாங்கள் தான் பெத்தோம் என கூற அதன்பின் தான் சமாதானம் ஆனாராம்.