ஏ.ஆர் ரகுமானுக்கும், மோகினி டேக்கும் தொடர்பா?!… கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்!…

Published on: November 21, 2024
ar rahuman
---Advertisement---

ஏ.ஆர் ரகுமானுக்கும், மோகினி டேக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் பரவி வரும் நிலையில் சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்திய சினிமாவில் இசைப்புயல் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட வருபவர் ஏ.ஆர் ரகுமான். சமூக வலைதளங்களில் எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்து வந்த ஏ.ஆர் ரகுமான் கடந்த இரண்டு தினங்களாக சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றார். அதற்கு காரணம் அவரது மனைவி சாய்ரா வெளியிட்ட விவாகரத்து பதிவுதான்.

இதையும் படிங்க: கங்குவா ஓவர்!.. அடுத்து உனக்குதான் வெயிட்டிங்!.. ஆர்.ஜே.பாலாஜிக்கு காத்திருக்கும் ஆப்பு!…

தனது வழக்கறிஞர் வந்தனா ஷா மூலமாக கணவர் ஏ ஆர் ரகுமானை பிரிவதாக அறிவித்திருந்தார். இந்த பதிவுக்கு ரகுமானும் திருமண வாழ்க்கையில் 30 வருடங்களை எட்டுவோம் என்று நம்பி இருந்தோம் இப்போது பிரிகிறோம் என்று மிகுந்த வருத்தத்துடன் கூறியிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி.

29 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கின்றது. சற்று யோசித்து முடிவு எடுத்திருக்கலாமே? என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதற்கிடையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசைக்குழுவில் இருக்கும் கிதார் இசைக்கலைஞர் மோகினி டே தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக கூறியிருந்தார்.

ar rahuman
ar rahuman

சாய்ரா விவாகரத்து அறிவித்த சில மணி நேரத்திலேயே அவரும் விவாகரத்து அறிவித்திருந்தது மிகப்பெரிய சர்ச்சையானது. இதனை தொடர்ந்து ஏ ஆர். ரஹ்மானையும் மோகினி டேயையும் வைத்து சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து செய்திகளை பரப்பி வருகிறார்கள். இந்நிலையில் சாய்ரா பானுவின் வழக்கறிஞர் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கொடுத்து இருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா பானு விவாகரத்திற்கும் மோகினி டே விவாகரத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சாய்ரா- ஏ.ஆர் ரகுமான் இருவரும்  பரஸ்பர சம்மதத்துடன் எடுத்த முடிவு. ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா இருவரும் உண்மையானவர்கள். இந்த முடிவு மிக எளிதாக எடுக்கப்பட்டது கிடையாது. நீங்கள் இதை தவறாக சித்தரிக்க முடியாது. இது இணக்கமாக எடுக்கப்பட்ட விவாகரத்து’ என்று விவரித்து இருக்கின்றார்.

இதையும் படிங்க: இருக்கிற பிரச்னையில புதுசா ஆரம்பிக்கும் சின்மயி… நீங்க திருந்த வாய்ப்பே இல்லையா?

இந்த செய்தியானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகின்றது. தற்போது வரை எந்த கிசுகிசுக்களிலும் சர்ச்சைகளிலும் சிக்காத ஏ ஆர் ரகுமான் தற்போது தனது விவாகரத்து முடிவால் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருப்பது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. பலரும் அவருக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.