நண்பன் படத்தை பார்த்துவிட்டு விஜய் மகன் செய்த வேலை… ஆடிப்போன தளபதி…

பொதுவாக நடிகர்கள் சினிமாவில் நடிப்பதுபோல் வீட்டிலெல்லாம் இருக்க மாட்டார்கள். திரையில் பஞ்ச் வசனம் பேசி, ரவுடிகளை பறக்கவிடுபவர்கள் வீட்டிற்குள் வந்தால் குடும்ப தலைவனாக, குழந்தைகளைக்கு அப்பாவாக சாதாரணமாகத்தான் இருப்பார்கள்.

அதேபோல், நடிகர்களின் குடும்பத்தினரும் அவர்கள் நடிக்கும் படங்களை பார்த்துவிட்டு கருத்து சொல்வார்கள். இது வழக்கமாக நடப்பதுதான். ஆனால், விஜய் நடித்த ஒரு படத்தை பார்த்துவிட்டு அவரின் மகன் செய்த காரியம் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

nanban
nanban

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம்தான் நண்பன். இப்படத்தில் விஜயுடன் ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் அவர்களை விஜய் வழி நடத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக தனக்கு பிடித்தை செய்ய வேண்டும். அதேநேரம் பெற்றோரின் மனமும் காயப்படக்கூடாது என விஜய் அவர்களுக்கு அறிவுரை கூறியது போல் காட்சிகள் இருக்கும்.

nanban

கேம்பஸ் இண்டர்வியூவில் ஜீவா நடந்து கொள்ளும் விதமும், எனக்கு இன்ஜினியர் ஆக விருப்பமில்லை, போட்டோகிராபர் ஆவதுதான் ஆசை என ஸ்ரீகாந்த் தனது அப்பாவிடம் பேசி அவரை சம்மதிக்க வைக்கும் காட்சியும் நெகிழ்ச்சியாக இருக்கும். அந்த காட்சிகள் முடிந்தபின் அவர்கள் இருவரும் விஜயிடம் வந்து பேண்டை கீழே இறக்கிவிட்டு தலைவா நீங்க கிரேட்’ என நன்றி கூறுவார்கள். படத்தின் இறுதி காட்சியிலும் நடிகர் சத்யன் இதை செய்வார்.

vijay

இப்படத்தை பார்த்த விஜயின் மகன் சஞ்சீவ் ஸ்ரீகாந்தும், ஜீவாவும் செய்தது போல அதேபோல பேண்ட்டை கீழே இறக்கிவிட்டு ‘தலைவா யு ஆர் கிரேட்’ என வாழ்த்து சொன்னாராம். இதைப்பார்த்து விஜயே கொஞ்சம் ஆடிப்போய்விட்டாராம்.

இதையும் படிங்க: “எம்.ஜி.ஆர்தான் என்னோட வாரிசு”… புரட்சித் தலைவர் குறித்து அன்றே கணித்த பிரபல நடிகர்…