இம்புட்டு கவர்ச்சி காட்டியும் வீணாபோச்சே.... இனியும் வேலைக்கு ஆகாது என சீரியலிலுக்கு தாவிய நடிகை...!

சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் வாய்ப்புக்காக நடிகைகள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் தான் கவர்ச்சி. எந்த அளவிற்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவிற்கு உச்சக்கட்டமாக கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் நடத்துவார்கள்.
ஆனால் இப்படி கவர்ச்சி காட்டியும் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் உள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை சாக்ஷி. அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் சாக்ஷி. இப்படத்தை தொடர்ந்து இதையடுத்து ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் போன்ற படங்களில் சாக்ஷி நடித்தார்.
பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் சாக்ஷிக்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் தற்போது வரை அவரது படங்கள் வெளியாகாமல் முடங்கி கிடக்கின்றன.

sakshi agarwal
இதனால் வேறு வழியின்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாறுமாறாக கவர்ச்சி காட்ட தொடங்கிய சாக்ஷி, கிளாமர் ரோலிலும் நடிக்க ரெடி என மறைமுகமாக இயக்குனர்களுக்கு சிக்னல் கொடுத்தார். ஆனால் யாரும் இவரை சீண்டுவதாக தெரியவில்லை.
அதனால் கடுப்பான சாக்ஷி தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி சீரியலில் களமிறங்கி உள்ள சாக்ஷி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறாராம். அதன்படி சாக்ஷி நடித்த எபிசோடு வரும் திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.