இந்த அடக்க ஒடுக்கம் கூட நல்லா இருக்கே.. க்யூட் போட்டோவை வெளியிட்ட சாக்ஷி!!

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் என தினசரி தினுசு தினுசாக தனது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி இளசுகளை சூடேத்தி வருகிறார் நடிகை சாக்ஷி அகர்வால். வடஇந்தியாவை சேர்ந்த இவர் சென்னையில் வளர்ந்தவர்.
அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' படத்தில், ஒரு சிறிய காட்சியில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இப்படத்திற்குப் பின் படங்கள் கிடைக்காததால் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டார். அங்கு கவினின் காதல் வலையில் சிக்கிய இவர் பலரின் கோபத்திற்கும் ஆளானார்.

sakshi agarwal
இவர் செய்த சில செயல்களால், இவரை பார்த்தாலே கடுப்பாகிறது என்று கோபத்தின் உச்சிக்கே சென்றார்கள் ரசிகர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இவர் மக்கள் மத்தியில் சற்று பிரபலமானார். இதையடுத்து இவருக்கு சினிமாவில் சிறுசிறு வாய்ப்புகள் கிடைத்தது.
இதன்பின் ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வசம் படங்களில் நடித்து மக்களிடம் மேலும் ரீச் ஆனார். அதன்பின் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான டெடி, அரண்மனை 3 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். தற்சமயம் பிசியாக நடித்துக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தில் படங்களை சமூக வலைத்தளங்களில் பாடிவிட்டு வருகிறார்.

sakshi agarwal
அந்தவகையில் தற்போது பிங்க் நிற குட்டி உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியுள்ளார். இப்படத்தில் சற்று தனது கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சாக்ஷி. இந்த படத்தை சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.