லியோவை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த பிரபாஸ்!. சலார் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

இந்த ஆண்டு ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் முதல் நாள் வசூலை விஜய்யின் லியோ முறியடித்து முதல் நாளே 145 கோடி வசூல் ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இந்திய சினிமாவையே அதிர வைத்தது. தற்போது பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அதை விட அதிகம் என பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து ஷாக் கிளப்பி உள்ளனர்.

பிரபாஸின் சலார் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன ஷாருக்கானின் டங்கி திரைப்படம் முதல் நாளில் 54 கோடி ரூபாய் வரை தான் வசூல் செய்தது. ஆனால், பெரும் போட்டியுடன் வெளியான சலார் திரைப்படம் முதல் நாள் மட்டும் உலகளவில் 175 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக பகீர் கிளப்புகின்றனர்.

இதையும் படிங்க: நான் இப்படி நடிச்சா படம் ஓடாது!.. இயக்குனருக்கே விபூதி அடித்த தேங்காய் சீனிவாசன்…

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் தான் 25 கோடி வரை ப்ரீ புக்கிங் ஆன்லைனில் நடைபெற்று இருந்தது. ஆஃப் லைன் மற்றும் ஆன்லைன் என சேர்த்து டோலிவுட்டில் மட்டும் 60 கோடி வசூலை சலார் ஈட்டியுள்ளதாகவும், இந்தியா முழுவதும் முதல் நாளில் 135 கோடி வசூலை அள்ளியிருப்பதாகவும், ஓவர்சீஸ் வசூல் சேர்த்து 175 கோடி வசூல் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை ஹம்பாலே தயாரிப்பு நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இன்று மாலை வெளியாகும் என தெரிகிறது.

பிரபாஸ் நடிப்பில் வெளியாகி உள்ள படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், இதே வசூல் வேட்டை தொடருமா? அல்லது முதல் வாரத்துடன் முடங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த ஆண்டு முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக இருந்த லியோவை 2ம் இடத்துக்கு பிரபாஸின் சலார் தள்ளி உள்ளது.

இதையும் படிங்க: அட்லீ பண்ணதுல பாதி கூட ராஜ்குமார் ஹிரானி பண்ணலையே!.. செம கடுப்பில் ஷாருக்கான்.. டங்கி வசூல் எவ்வளவு?

 

Related Articles

Next Story