சலார் பிரபாஸா இது!.. படத்துல பிரசாந்த் நீல் ரொம்ப பட்டி டிங்கரிங் பார்த்துருப்பாரு போல.. தப்பிக்குமா?

Published on: December 16, 2023
---Advertisement---

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு ஒரு வெற்றிப் படம் கூட இன்னமும் அமையவில்லை. அந்தளவுக்கு யார் கண் பட்டுச்சோ தெரியவில்லை அவர் உடல் தோற்றமே ஒரு மாதிரி மாறி விட்டது. ஆதிபுருஷ் படத்தில் அவரது தோற்றத்தை பலரும் கிண்டல் செய்ய காரணமும் அதுதான்.

ஆனால், சலார் படத்தின் டிரெய்லரில் பிரபாஸ் செம ஃபிட்டாகவும் பயங்கரமாகவும் இருக்கிறாரே எப்படி என்கிற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: இதெல்லாம் இங்க செட்டாதுங்க! அதான் இப்படி ஆயிட்டான் – விஜயகாந்தை பற்றி ராதாரவி சொன்ன தகவல்

பாகுபலி படத்தில் அனுஷ்காவை டீ ஏஜிங் செய்து இளமையாக காட்டியது போலத்தான் சலார் படத்திலும் ஏகப்பட்ட பட்டி டிங்கரிங் வேலைகள் நடந்திருப்பதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், பிரபாஸின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேலும், டென்ஷனாகி விட்டனர். அடுத்து நாக வம்ஸி இயக்கத்தில் கமல்ஹாசன், தீபிகா படுகோன் உடன் இணைந்து பிரபாஸ் கல்கி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கும் இவருக்காக மட்டும் பல கோடிகள் செலவிடப்பட்டு உருவத்தை ஃபிட்டாக காட்டுகின்றனாரா? என்றும் ட்ரோல்கள் பறக்கத் தொடங்கி உள்ளன.

இதையும் படிங்க: உன்ன அடிச்சிக்க ஆளே இல்ல செல்லம்!… கேரளத்து பொண்ணாவே மாறிய தர்ஷா குப்தா!..

சலார் திரைப்படம் கேம் ஆஃப் த்ரோன்ஸ் போல இருக்கும் என பிரித்விராஜ் சுகுமாறன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஏற்கனவே அந்த படம் கேஜிஎஃப் படத்தை போலவே உள்ளதாக ஹெவியான ட்ரோல்கள் குவிந்து வரும் நிலையில், இந்த படமாவது பிரபாஸுக்கு க்ளிக் ஆகுமா? தெலுங்கு திரையுலகில் இந்த ஆண்டு எந்தவொரு பெரிய படமும் வசூல் வேட்டை நடத்தாத நிலையில், ஆண்டு இறுதியில் அந்த மேஜிக்கை சலார் நடத்துமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.