Categories: Cinema News latest news

மீண்டும் ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் தான் போலயே.. பிரபாஸுக்கு வாழ்வு தான்.. மிரட்டும் சலார் ட்ரைலர்..!

Salaar Trailer: கேஜிஎஃப் என்ற மாஸ் ஹிட்டை கொடுத்த பின்னர் இயக்குனர் பிரசாந்த் நீல்லின் அடுத்த படைப்பாக வெளியாக இருக்கிறது சலார். இப்படத்தின் ட்ரைலர் தற்போது ரிலீஸாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாய் பிளக்க வைத்து இருக்கிறது காட்சிகள்.

கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனமான ஹோமலே தான் இப்படத்தினையும் தயாரித்து இருக்கிறது. பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார்கள். மேலும் பிரித்விராஜ் தன்னுடைய கேரக்டருக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என எல்லா மொழிக்கும் அவரே டப்பிங் பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க: ரஜினி பட இயக்குனரை லாக் செய்த விஜய்!. தளபதி 69 பரபர அப்டேட்.. அப்ப ஹிட் கன்பார்ம்!..

இரண்டு நெருங்கிய நண்பர்கள் விரோதியாக மாறுவது தான் கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ரத்தம் தெறிக்க பக்கா மாஸ் ஆக்‌ஷனாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் நீல்லின் திரைக்கதை எப்போதுமே ஹாலிவுட் தரத்தில் இருக்கும். இந்த படம் அதில் இருந்து தவறவே இல்லை.

இதையும் படிங்க: தளபதி ஷூட்டிங்கில் ஷோபனாவை கதற விட்ட மணிரத்னம்… 20 வயசுல கஷ்டம் தானப்பா..!

சலார் ட்ரைலரைக் காண: https://www.youtube.com/watch?v=efrYtSEnJFc

 

Published by
Akhilan