Cinema News
முதலுக்கே மோசம்!.. ஓவர் பில்டப் காட்டிய சலார்!.. தமிழ்நாட்டில் ஒரு நாள் வசூல் இவ்வளவுதானா?..
பாகுபலி திரைப்படம் மூலம் தமிழகம் மற்றும் வட இந்தியாவிலும் பிரபலாகியிருப்பவர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் பேன் இண்டியா படமாக வெளிவந்து தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்து ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதைத்தொடர்ந்து பிரபாஸின் மார்கெட் ஜெட் வேகத்தில் எகிற சம்ளபமும் பல மடங்கு அதிகரித்தது. அதோடு, அவர் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகரித்துவிட்டது. ஒருபக்கம், கேஜிஎப், கேஜிஎப் 2 ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் உட்பட பேன் இண்டியா அளவில் அப்பட இயக்குனர் பிரசாந்த் நீல் பிரபலமாகிவிட்டார்.
இதையும் படிங்க: நயன் சம்பளத்தில் 10 சதவீதம் கூட வசூலிக்காத அன்னப்பூரணி!.. இதுல லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் வேணுமாம்!..
பிரசாந்த் நீலும், பிரபாஸும் இணைந்து உருவான திரைப்படம்தான் சலார். இந்த படத்தில் பிரபாஸோடு சேர்ந்து மலையாள நடிகர் பிருத்திவிராஜும் நடித்திருந்தார். இந்த படம் தொடர்பான புகைப்படங்களும், டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்களும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கேஜிஎப் படம் போல இந்த படமும் அதிரடி சண்டை காட்சிகளோடு இருக்கும் என ரசிகர்கள் நினைத்தனர்.
இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் தமிழகத்தில் வெளியிட்டது. இந்த படத்தின் தமிழக உரிமையை வாங்க கடும்போட்டி இருந்துள்ளது. ரூ.30 கோடி வரை கொடுக்க சிலர் தயாராக இருந்தனர். ஆனால், ரூ.50 கோடி கொடுத்தால் மட்டுமே வினியோக உரிமை என தயாரிப்பு நிறுவனம் கறார் காட்டியது.
இதையும் படிங்க: இது கன்பார்ம்!..தளபதி68 பட டைட்டில் இதுதான்.. கமலுக்கு செம டஃபா இருக்குமே!…
இப்போது இந்த படம் தமிழகத்தில் வெளியாகி முதலில் நாளில் ரூ.10 கோடிக்கும் குறைவாகவே வசூல் செய்துள்ளது. எனவே, நல்லவேளை நாம் தப்பித்தோம் என பல வினியோகஸ்தர்களும் சந்தோஷம் அடைந்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் இபடத்திற்கு வந்த எதிர்மறையான விமர்சனமே ரசிகர்களை தியேட்டருக்கு செல்லாமல் தடுத்துவிட்டது.
ஓவர் பில்டப், கேஜிஎப் படம் போலவே தாய் செண்டிமெண்ட், கொஞ்சம் கூட லாஜிக் இல்லாத காட்சிகள், கதை என ஒன்றுமே இல்லாமல் நகரும் திரைக்கதை என சலார் திரைப்படம் ரசிகர்களை பெரிதும் சோதித்துவிட்டது. எனவே, படத்தை பார்த்த பலரும் திட்டி தீர்த்துவிட்டனர். எனவேதான், இப்படம் தமிழகத்தில் பெரிதாக வசூல் ஆகவில்லை. அதேநேரம், தெலுங்கில் பிரபாஸுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் அங்கு முதல் நாள் ரூ.25 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாதி முடிந்து படம் டிராப்! வேறு படமா வந்து சூப்பர் ஹிட் அடித்த சூப்பர் ஸ்டார் படம்!….