Kayal: சன் தொலைக்காட்சியின் டாப் ஒன் தொடரான கயல் சீரியலில் ஹீரோ, ஹீரோயின் சம்பள விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது கயல் சீரியல் தான் சன் தொலைக்காட்சியின் நம்பர் ஒன் தொடராக டிஆர்பியில் ஹிட்டடித்து வருகிறது. இந்த சீரியல் தொடங்கி இதுவரை ஐந்து வருடத்தை தாண்டி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
எங்கையோ தொடங்கிய கதை தற்போது புது ரூட் பிடித்து புதிய கதைக்களத்தில் சென்று கொண்டு இருக்கிறது. அடிக்கடி இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களுக்கு பிரச்சனை என்பது தொடர்கதையாகவும் மாறி இருக்கிறது.
முதலில் இதில் கயலுக்கு அண்ணனாக நடித்த அய்யப்பனுக்கும் அவர் மனைவிக்கும் பெரிய பிரச்சனை வெடிக்க விஷயம் ஊடகங்களில் கலவரத்தை கிளப்பியது. தொடர்ந்து சமீபத்தில் இது நடித்த துணை நடிகை தற்கொலை செய்து கொண்டார்.
இருந்தும் இதுவரை ஹீரோ சஞ்சீவ் மற்றும் ஹீரோயின் சைத்ரா ரெட்டி இருவருமே இந்த சீரியலில் லீட் கதாபாத்திரங்களாக தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு எபிசோட்டுக்கு சைத்ரா 60 ஆயிரம் வாங்கி வருகிறாராம்.
அவரின் ஜோடியாக நடிக்கும் சஞ்சீவுக்கு 25 ஆயிரம் சம்பளமாகவும் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போதைய சீரியல் வட்டாரத்தில் அதிக சம்பளம் வாங்கும் ஜோடி இவர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.





