ரஜினியை இங்க கொண்டாடுறோம்.. ஆனா நீங்க? கோலிவுட் பற்றி சல்மான்கான் ஆதங்கம்

salman
மற்ற மொழி சினிமாக்களை நாங்கள் கொண்டாடுகிறோம். ஆனால் எங்கள் படங்கள் மற்ற ரசிகர்கள் பார்ப்பதில்லை என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆதங்கத்துடன் தெரிவித்திருக்கிறார். பாலிவுட்டில் ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சல்மான்கான். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக பாலிவுட்டில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். ஆனால் இன்னும் அவருக்கு திருமணமாகவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.
நடிகை ஐஸ்வர்யாராயுடனான காதல், மற்ற நடிகைகளுடன் கிசுகிசு என பல சர்ச்சைகளில் சிக்கியவர். தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்கள் ஜோடியை பற்றி கூட சமீபத்தில் ஒரு சர்ச்சை கிளம்பியது. அதற்கு சல்மான்கானும் தக்க பதிலடி கொடுத்தார்.
என்னுடன் ஜோடியாக நடிப்பதில் ராஷ்மிகாவிற்கோ அவரது வீட்டில் உள்ளவர்களுக்கோ பிரச்சினை இல்லாத போது மற்றவர்கள் சொல்வதை ஏன் பொருட்படுத்த வேண்டும் என்று கேட்டார். இந்த நிலையில் ரஜினிகாந்த் சார், சிரஞ்சீவி, சூர்யா , ராம்சரண் இவர்களின் படங்களை நாங்கள் இங்கு பார்க்கிறோம். அவர்கள் படங்கள் இங்கு நன்றாக ஓடுகின்றன. ஆனால் எங்கள் படங்களை அவர்களின் ரசிகர்கள் பார்க்க செல்வதில்லை.
அவர்களின் ஊர்களுக்கு நான் செல்லும் போதெல்லாம் பாய் பாய் என்று செல்லமாகத்தான் அழைக்கிறார்கள். ஆனால் படங்களை மட்டும் பார்ப்பதில்லை என்று மிகுந்த ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார் சல்மான்கான். இது ஒரு வகையில் சரியான ஆதங்கமாக இருந்தாலும் ஹிந்தி போடா என்று கோஷமிடும் மக்களுக்கு மத்தியில் ஹிந்தி படத்தை பாருங்கள் என்று சொன்னால் யார் பார்ப்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கிறது. எப்படி அட்லீ இங்கு இருந்து ஜவான் என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தாரோ அதை போல் முருகதாஸுக்கும் ஒரு பெரிய வெற்றி கிடைக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.