More
Categories: Cinema News latest news

ராஷ்மிகா மந்தனா பாட!.. சல்மான் கான் சண்டை போட!.. ஏ.ஆர். முருகதாஸ் சும்மா பட்டையை கிளப்பிட்டாரே!..

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ் மற்றும் ஆடுகளம் கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் திரைப்படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் சல்மான் கான் நடித்துள்ள சிக்கந்தர் திரைப்படம் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வரும் மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது. இன்று மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சல்மான்கான் மற்றும் காஜல் அகர்வால் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

டீசர் மற்றும் பாடல்களில் காஜல் அகர்வாலை இதுவரை மறைத்து வைத்திருந்த ஏ.ஆர். முருகதாஸ் சிக்கந்தர் ட்ரெய்லரில் வெளிக் காட்டியுள்ளார். ராஷ்மிகா மந்தனா மற்றும் காஜல் அகர்வால் இடையே கடுமையான கவர்ச்சி போட்டி படத்தில் நிலவும் என தெரிகிறது.

பிரம்மாண்டமான பாடல்கள் அனல் தெறிக்கும் சண்டை காட்சிகள் என ஏ.ஆர். முருகதாஸ் சல்மான் கானுக்கு கண்டிப்பாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்கிற முயற்சியிலும் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் என்பது ட்ரெய்லரை பார்த்தால் தெளிவாக தெரிகிறது.

கண்டிப்பாக இந்த ரம்ஜான் பண்டிகைக்கு சிக்கந்தர் திரைப்படம் சல்மான் கான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்றே கூறலாம். சத்யராஜ் தான் இந்த படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளார். அவருடன் நேருக்கு நேர் சல்மான் கான் சண்டை போடும் காட்சிகள் எல்லாம் ட்ரைலரில் இடம் பெற்றுள்ளன.

ரஜினிகாந்தின் கூலி படத்திலும் சத்யராஜ் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் ஹோம்லியாகவும் ராஷ்மிகா மந்தனா மாடர்னாகவும் நடித்துள்ளனர். அதிலும், கடைசியில் ராஷ்மிகா மந்தனா பாட சல்மான் கான் எதிரிகளை போட்டு துவம்சம் பண்ணும் ட்ரெய்லர் கட் வேறலெவல்.

Published by
Saranya M