இப்போ தமிழ்.. அடுத்து தெலுங்கு - ஒரு வெற்றிக்கு எத்தன போராட்டம்.. சல்மான் கானுக்கே இந்த நிலைமையா?

salman
பாலிவுட் வசூல் மன்னன் சல்மான் கானின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த 'சிக்கந்தர்' படம் மோசமான விமர்சனங்களும், வசூலில் சரிவையும் சந்தித்துள்ளது. பலரும் இதனை சல்மான் கானின் மோசமான படங்களில் ஒன்றாக கூறி வருகின்றனர். இதனிடையே, தனது அடுத்த படத்தின் இயக்குநரை சல்மான் கான் இன்னும் முடிவு செய்யவில்லை.
மற்றபடி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ள படத்தில் சல்மான் கான் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்களும் வெளியாகி, பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளன.
ஏனென்றால், 'மிஸ்டர் பச்சன்' எனும் தோல்வி படத்தை இயக்கியவர் ஹரிஷ் ஷங்கர். அவருடைய 'உஸ்தாத் பகத் சிங்' படமும் பவன் கல்யாணின் தேதிக்காக காத்திருக்கிறது. இந்த நிலையில், சல்மான் கான் படத்தை இயக்கவுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்பதிவின் மூலம் இருவரும் தங்களின் தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டும்.

மற்றொரு பக்கம், ஹரிஷ் ஷங்கர் இதற்கு முன் தெலுங்கில் பல ஹிட் படங்களை இயக்கியவர் என்பதால், அவரை நம்பி இந்த சான்சை அவருக்கு கொடுத்திருக்கலாம் என்கிறார்கள். ஏனென்றால், 2016க்கு பின் இத்தனை வருடங்களாக பெரிய வெற்றிகளை ருசிக்காத சல்மான் கான் நீண்டகாலமாக ஒரு வெற்றிக்காக போராடி வருகிறார்.
அந்த தேடலில் தான் ஏ.ஆர்.முருகதாஸை நம்பிச் சென்றார். ஆனால் அது படுதோல்வியில் முடிய தற்போது ஹரிஷ் சங்கர் பக்கம் சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அட்லீ சல்மான் கான் உடன் இணையவிருப்பதாக இன்டஸ்ட்ரியில் ஒரு பேச்சு ஜவான் படத்துக்கு பிறகு உலா வருவது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட அட்லீ சல்மான் இணையும் படம் கன்பார்ம் என்றும், அதில் தமிழகத்தைச் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் யாரேனும் ஒருவர் நடிக்கலாம் என்றும் பேசப்படுகிறது.