இவரையா கலாய்ச்சீங்க… அட்லீயின் அடுத்த பட அப்டேட்.. ஹீரோ பேரை கேட்டாலே ஷாக் ஆய்டுவீங்க
Atlee: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கும் நிலையில் அதை பார்த்த ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஷாக்காகி இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.
கோலிவுட் சினிமாவில் நிறைய விமர்சனங்களை வாங்கி குவித்தவர் இயக்குனர் அட்லீ. எனினும் அவர் இதுவரை எந்த ஒரு தோல்வி படத்தையும் கொடுத்ததில்லை. தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. படம் சூப்பர் ஹிட் என்றாலும் கதை மௌன ராகம் படத்தின் காப்பியென கூறப்பட்டது.
இதையும் படிங்க: மலையாள கதையே ஓயலை… தெலுங்கு சினிமா பக்கம் பிரச்னை பத்திக்கொண்டதாம்.. பதற்றத்தில் பிரபல ஹீரோக்கள்
இருந்தும் அவர் தன்னுடைய இரண்டாவது படத்தில் நடிகர் விஜய் உடன் பணியாற்றினார். தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக அட்லீயின் இயக்கத்தில் விஜய் 3 படங்களை நடித்துக் கொடுத்தார். மூன்று படங்களுமே ஒவ்வொரு தமிழ் படங்களின் காப்பி என கூறப்பட்டாலும் அட்லீ அதற்கெல்லாம் கவலை கொள்ளாமல் தொடர்ச்சியாக தன்னுடைய இயக்கத்தில் கவனம் செலுத்தினார்.
இந்த மூன்று படங்கள் கொடுத்த வெற்றியை எடுத்து பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார். இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கும் ஷாருக்கான் இருக்கு அப்படம் ஆயிரம் கோடி வசூல் திரைப்படமாக அமைந்தது. தற்போது அட்லீயின் ஆறாவது திரைப்படம் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.
இதையும் படிங்க: வேட்டையன் படத்துக்கு 7500 திரையரங்குகள்… ஆடியோ லாஞ்ச்… ரஜினி சொன்ன தகவல்
பாலிவுட்டின் ஐகான் சல்மான் கான் தான் அட்லீ அடுத்து இயக்க இருக்கிறார். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் இன்னொரு முக்கிய நடிகராக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சல் திரைப்படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என கலாய்க்கப்பட்ட நிலையில் தற்போது கமல்ஹாசனை அட்லீ இயக்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.