அஜித்தால மட்டும் தான் முடியுமா?.. சால்ட் & பெப்பர் லுக்கில் கலக்கிய தமிழ் நடிகர்கள்..
தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகர் அஜித். அதற்கு முக்கிய உதாரணமாக இருந்ததில் குறிப்பிடத்தக்கது அவரின் சால்ட் & பெப்பர் லுக் தான். தற்போது ட்ரெண்டாகி வரும் சால்ட் & பெப்பர் லுக்கில் பல நடிகர்கள் நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திவருகிறது. ஹீரோனாலே கரு நிற முடியுடன், அழகான தோற்றத்தில் இருப்பவர் தான் என்று இருந்த நிலையை முற்றிலுமாக மாற்றியவர் அஜித்.
பெரும்பாலும் வெள்ளை நிற முடியுடன் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அஜித்னாலே அது சால்ட் & பெப்பர் லுக் தான் என்று சொல்லுமளவிற்கு மிகவும் பிரபலமடைந்தார். அவரை மாதிரியே தமிழ் சினிமாவில் பெப்பர் சால்ட் லுக் போன்ற தோற்றத்தில் நடித்த நடிகர்கள் யார் மற்றும் யார் அதிகமாக கவர்ந்தது என பார்க்க போகிறோம்.
நடிகர் ரஜினி : ரஜினி என்றாலே தலையை ஸ்டைலாக வாருவது தான். ஆனால் கபாலி படத்தில் முழு சால்ட் & பெப்பர் லுக்கில் தோன்றில் அசத்தியிருப்பார். அதனை தொடந்து பேட்ட படத்திலும் அதே மாதிரி நடித்திருப்பார். அவர் எப்படி நடித்தாலும் ரசிகர்களின் ரசனை அதிகரித்துக் கொண்டே தான் போகும். அவருக்கு இணை யாருமில்லை.
நடிகர் கமல் : இதுவரை நடித்த படங்களில் கமல் எப்பொழுதும் வெள்ளை நிற தலைமுடியுடன் ஹீரோவாக நடித்ததில்லை. அதாவது வயதான தோற்றம் வேண்டுமென்றால் நடித்திருப்பார். ஆனால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்காத கமல் சால்ட் & பெப்பர் லுக்கில் நடித்த படம் இமாலய வெற்றி பெற்ற விக்ரம் படம் தான். அந்த தோற்றத்தில் சும்மா உலக நாயகன் தெறிக்க விட்டிருப்பார்.
நடிகர் விஜய் : விஜய் சமீபகாலமாக பங் வைத்தே நடித்திருப்பார். தெறி, வாரிசு படத்திலும் பங் வைத்து நடித்திருப்பார். ஆனால் முதன் முதலில் சால்ட் & பெப்பர் லுக்கில் தற்போது தயாராகி வரும் லியோ படத்தில் பார்க்க போகிறோம். அது சம்பந்தமான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய் சேதுபதி : இயல்பாகவே விஜய் சேதுபதிக்கு தாடி , தலைமுடி நரைத்திருந்தாலும் சில படங்களில் சால்ட் & பெப்பர் லுக்கில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.ன் ‘விக்ரம் வேதா’ படத்தில் அதே போன்ற லுக்கில் தான் இருப்பார்.
நடிகர் விக்ரம் : நடிகர் விக்ரமும் கௌதம் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சால்ட் & பெப்பர் லுக்கில் தான் நடிக்கிறார். இதுபோன்ற லுக்கில் நடிப்பதால் அவர்களுக்கு வயசாச்சு என்பதையும் தாண்டி மேலும் ரசிக்க வைக்கிறது.