More
Categories: Cinema News latest news

ராமராஜனின் ‘சாமானியன்’ படம் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸா?!.. கெத்து காட்டும் மக்கள் நாயகன்!..

இயக்குனர் இராமநாரயாணனிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் ராமராஜன். மண்ணுக்கேத்த பொண்ணு படம் மூலம் இயக்குனராக மாறினார். அதன்பின் மருதாணி, ஹலோ யார் பேசுறது, மறக்க மாட்டேன், சோலை புஷ்பங்கள், ஒன்று எங்கள் ஜாதியே ஆகிய படங்களை இயக்கினார்.

அதன்பின் ஹீரோவாக களம் இறங்கினார். அவரின் நடிப்பில் வெளியான படங்கள் ஹிட் அடிக்கவே தொடர்ந்து நடிக்க துவங்கினார். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் நல்ல வசூலை பெற்றது. பெரும்பாலான நடிகர்கள் சிட்டி சப்ஜெக்ட் என சொல்லப்படும் நகர்ப்புற கதைகளில் நடித்தபோது ராமராஜன் தொடர்ந்து கிராமப்புற கதைகளில் நடித்தார்.

Advertising
Advertising

எனவே, இவரின் திரைப்படங்கள் கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று மக்கள் நாயகனாக மாறினார். இவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் செய்த வசூல் ரஜினி, கமலையே அசர வைத்தது. ராமராஜனுக்கு மக்களிடம் இருந்த வரவேற்பை பார்த்து ரஜினியே ஆச்சர்யப்பட்டார்.

பல ஹிட் படங்களை கொடுத்த ராமராஜன் ஒருகட்டத்தில் மார்க்கெட்டை இழந்தார். 13 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் இப்போது சாமானியன் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படத்தை ராகேஷ் என்பவர் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் என பலரும் நடித்திருக்கிறார்.

Samaniyan

இந்த படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 1000 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. சென்னையில் மட்டும் 100 தியேட்டர்களிலும், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா 70 தியேட்டர்களிலும், தமிழகம் முழுக்க 700 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சேர்த்து சுமார் 1000 தியேட்டர்களில் இப்படம் வெளியாகி இருக்கிறது.

வங்கி கடனில் நடக்கும் மோசடி, அதனால் பாதிக்கப்படும் ஒருவன் என கரண்ட் டிரெண்டுக்கு ஏற்றது போல் கதை அமைத்திருக்கிறார் ராகேஷ். இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த திரையுலகை சேர்ந்த பலரும் படம் நன்றாக இருப்பதாக சொல்லி வருகிறார். சாமானியன் படம் ராமராஜனுக்கு நல்ல ரீ எண்ட்ரியாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Published by
சிவா

Recent Posts