பாக்கியராஜ், அஜீத்தை விட ராமராஜன் ஒரு படி மேல... பிரபலம் சொல்றது இதுதான்..!

பிரபல யூடியூபரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து வெளியாகி இருக்கும் சாமானியன் படத்தைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

மதுரையைச் சேர்ந்த ராமராஜன் சென்னையில் உள்ள பிரபல வங்கிக்குச் செல்கிறார். அங்கு வங்கி ஊழியரிம் சென்று பல லட்சம் போடுவதாக சொல்கிறார். அவர் மேனேஜர் அறைக்குச் செல்கிறார். அப்போது ரிவால்வரைக் காட்டுகிறார். வங்கியில் உள்ள எல்லாருமே பீதியில் நிற்கிறார்கள். அவர் ஏன் அப்படி செய்தார்? தீவிரவாதியா, கொள்ளைக்காரனா என்பதே கதை.

இதையும் படிங்க... கார்த்தியோட ஆசை நடிகராவதே இல்லையாம்… அப்புறம் எப்படி ஹீரோவானாரு தெரியுமா?

ஒரு வரி கதையை அருமையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராகேஷ். பல ஆண்டுகள் கழித்து தனக்கு பொருத்தமான கதையைத் தேர்ந்தெடுத்து நடித்து சாதித்துள்ளார் ராமராஜன். கரகாட்டக்காரன் ராமராஜனுக்கும், 62 வயது ராமராஜனுக்கும் உள்ள வித்தியாசத்தை இயல்பாகக் காட்டி இருக்கிறார். அலட்டல் இல்லாத நடிப்பு.

கரகாட்டக்காரன் படத்தை நினைத்து இந்தப் படத்திற்கு வந்தால் ஏமாந்து போவீர்கள். வழக்கம்போல எம்ஜிஆரை நினைவூட்டும் வகையில் நடித்திருப்பார். இந்தப் படத்திலும் நல்ல கருத்துகளை சொல்கிறார். ஆனால் என்ன காரணத்தினாலோ எம்ஜிஆரை அவர் நினைவூட்டவில்லை. இந்தப் படத்தில் இளம் ஜோடிகளாக வரும் நஷா, லியோ சிவகுமார் பிரமாதமாக நடித்துள்ளனர். இன்னொரு ராமராஜனாகவே வலம் வருகிறார் லியோ சிவகுமார். நஷாவும் சோகம், காதல் என அட்டகாசமாக நடித்துள்ளார்.

படத்தில் ராமராஜனின் வலதுகையாக ராதாரவி, இடது கையாக எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் பின்னி பெடல் எடுத்து இருக்காங்க. ஒற்றைக்கண்ணனாக வரும் எம்எஸ்.பாஸ்கர் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

Ramarajan

Ramarajan

வங்கி அதிகாரியாக போஸ் வெங்கட் அமைதியான வில்லனாக நடித்துள்ளார். எப்போதும் டெபாசிட் டெபாசிட்னு பேயா அலைகிறார். சரவணன் சுப்பையா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஒரே காட்சியில் வந்தாலும் அறந்தாங்கி நிஷா அருமையாக நடித்துள்ளார். தீபா சங்கர் பொருத்தமான தேர்வு. வருகிற நேரத்தில் எல்லாம் கண்ணீரை வரவழைக்கிறார்.

இந்தப்படத்தில் இளையராஜா சொந்தக்குரலில் ஒரு பாட்டுப் பாடியிருக்கிறார். ஏன் பாடினார்னு தெரியல. ஆனாலும் கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறாரு. பழைய பாட்டுகளைப் போட்டுத் தேத்தியிருக்காரு. பாக்கியராஜ், அஜீத்துக்கும் வங்கிக் கொள்ளை சம்பந்தமாக படங்கள் வந்துள்ளன. ஆனால் இது போன்ற ஒரு உணர்வு அந்தப் படங்களில் இல்லை. வங்கியில் கடன் வாங்கிவிட்டு மக்கள் படும் பாடு இருக்கே. உயிரோடு சாகடித்து விடுவான். படித்துப் பார்க்காமல் நீட்டுன இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போடுகிறோம்.

இந்தப் படத்தில் தெரிந்தோ தெரியாமலோ தனியார் வங்கிகளில் கடன் வாங்காதே என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ் என்பதைத் தான் இந்தப் படம் சொல்கிறது. வட்டிக்கு வட்டி போட்டு நம்மை சாகடித்து விடுவார்கள். நல்ல குடும்ப கதை. பாசப்போராட்டங்களையும் அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறார். கடன் வாங்கக்கூடாது என்ற எண்ணத்தோடு வீட்டுக்கு வருவீங்க. இந்தப் படத்துக்கு நூற்றுக்கு 61 மார்க் என்று சொல்லி விமர்சனம் செய்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

பாக்கியராஜ் நடித்த ருத்ரா படத்திலும், அஜீத் நடித்த துணிவு படத்திலும் வங்கிக் கொள்ளை சம்பந்தமான காட்சிகள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it