More
Categories: Cinema News latest news

இனி நாம் இப்படிக்கா போவோம் : புது ரூட்டில் சமந்தா

சென்னை பெண்ணான சமந்தா தற்போது ஆந்திராவில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் சமந்தா முன்னணி நடிகையாகவே உள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சமந்தா தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் சாகுந்தலம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது காதல் திருமணம் விவாகரத்து வதந்திகள் என பல பிரச்னைகளில் தவித்து வரும் சமந்தா கொஞ்சம் கொஞ்சமாங அதில் இருந்து வெளியே வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் சமந்தா ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த சமந்தா தற்போது முதல் முறையாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். தற்போது அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

இதுதவிர தெலுங்கில் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். சமந்தா அவரின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பின்னர் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். மேலும் விவாகரத்து போன்ற பிரச்சனைகளால் ஏற்பட்ட பின்னடைவை சமாளிக்கும் விதமாகவும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Published by
adminram

Recent Posts