சமந்தாவுடன் இணைந்து நடிக்கும் பிரபல ஸ்டாரின் மகள்..!

by adminram |
samantha
X

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நடிகை சமந்தா. சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவரான இவர் கடந்த 2010ல் மாஸ்கோவின் காவிரி படத்தின்மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பின் விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகையாக உள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் ஆகியோரின் படங்களில் நடித்து அங்கும் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவருக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து படங்களில் நடித்துவந்த சமந்தா நான்கு வருட இல்லற வாழ்வை முறிப்பதாக கடந்த 2ம் தேதி அறிவித்தார்.

தற்போது இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் நடிக்கிறார்.

allu arjun with daughter

allu arjun with daughter

சாகுந்தலம் படத்தை 'ருத்ரமாதேவி' படத்தை இயக்கிய இயக்குனர் குணசேகர் இயக்கி வருகிறார். இது மகாபாரத கதையை மையமாகக்கொண்டு உருவாக்கி வருகிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக அல்லு அர்ஹா அறிமுகமாகிறார்.

இந்நிலையில் அர்ஹா குறித்து பேசிய சமந்தா, 'அவள் ஒரு ராக்ஸ்டாராக பிறந்தவள். படப்பிடிப்பில் அவள் பயப்படடாமல் தன்னம்பிக்கையுடன் இருந்தாள். என்னுடைய படத்தில் அல்லு அர்ஹா அறிமுகமாவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், பல வருடங்கள் கழித்து அவள் சினிமாவை உலுக்கப்போகிறாள்' என்றார்.

Next Story