அல்லு அர்ஜுன் வாய்ப்பு கிடைச்சிடுச்சா?.. திருப்பதியில் சமந்தா!.. டிராகன் ஹீரோயின் போயிருக்காரே!

மும்பை, சென்னை என்று ஊர் ஊராக சுற்றி பட வாய்ப்புகளை தேடி அலைந்து வரும் சமந்தா தற்போது தெலுங்கிலும் பட வாய்ப்பை தேடி சென்றுள்ளார் என்கின்றனர். இந்நிலையில் இன்று அவர் அதற்காக திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
விண்ணைதாண்டி வருவாயா படம் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா பானா காத்தாடி, நீ தானே என் பொன் வசந்தம், தெறி, கத்தி, தங்க மகன், 24, அஞ்சான் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தளபதி விஜய்யுடன் நடித்திருந்த மெர்சல் படத்திற்கு பிறகு பெரிதாக எந்த படமும் சமந்தாவிற்கு கை கொடுக்க வில்லை. அதை தொடர்ந்து பல படங்களிலும் அவர் நடித்திருந்தாலும் பெரிதாக எதுவும் வெற்றி பெறவில்லை.
சமந்தா 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாகார்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். நட்சத்திர ஜோடியான இவர்கள் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் இணைந்து பணிபுரிந்தனர். மேலும், 2021ம் ஆண்டு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

விவாகரத்திற்கு பிறகு திடீரேன சமந்தா ஒரு அறியவகை நோயால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியே இருந்தார். பல பிராண்டுகளின் அம்பாசிடராக இருந்தது தான் தனது இந்த நிலைக்கு காரணம் எனக் கூறியிருந்தார். அதனால் தற்போது வரும் பல விளம்பரங்களை தவிர்த்து வருவதாக கூறியிருந்தார்.
மேலும், சமந்தா மும்பை, தமிழ்நாடு என சுற்றித் திரிந்து பட வாய்ப்புகளை தேடிவரும் நிலையில் தற்போது திருப்பதி சென்று ஏழுமலையானின் தரிசனத்தை பெற்றுள்ளார். அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் சமந்தா தான் ஹீரோயின் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. அந்த படத்தின் வாய்ப்பு கிடைத்த நிலையில், திருப்பதி ஏழுமலையானுக்கு நன்றி சொன்னாரா என்றும் கேட்டு வருகின்றனர்.

நடிகை சமந்தாவை போல தற்போது தென்னிந்தியாவில் இளம் நடிகையான கயாடு லோஹருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், அவரும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். திருப்பதி வந்தா திருப்பம் என சும்மாவா சொல்வார்கள் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.