நா செகண்ட் ஹேண்ட்டா?!.. டைவர்ஸ் ரொம்பவே வலிச்சது!.. திடீரென வைரலாகும் சமந்தா!..

samantha
நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு தான் அனுபவித்த அவமானங்களை குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கின்றார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வெப் சீரியஸ்களில் நடித்து வருகின்றார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஜெயம் ரவி போட்ட 4 கண்டிஷன்கள்!.. செம டெரரா இருக்காரே!….
திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெறுவதாக அறிவித்தார்கள். இவர்களின் விவாகரத்து அறிவிப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிறகு இருவரும் தங்களது படங்களில் பிஸியாக நடித்து வந்தார்கள்.
நடிகை சமந்தாவுக்கு மயோசிட்டிஸ் என்கின்ற அரியவகை தசைசிதைவு நோய் ஏற்பட்டதை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதனால் நடிப்பில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக் கொண்டார். நடிகர் நாகசைதன்யா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இதற்கு இடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகசைதன்யா நடிகை சோபிதா உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

samantha
வரும் டிசம்பர் 4-ம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடிகை சமந்தா தனது விவாகரத்துக்கு பிறகு தான் சந்தித்த அவமானங்களை பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'ஒரு பெண் விவாகரத்து செய்யும் போது அதில் பல அவமானங்கள் இணைக்கப்படுகின்றது. என்னை செகண்ட் ஹேண்ட் மற்றும் வேஸ்ட் லைஃப், பயன்படுத்தப்பட்டவர் என்றெல்லாம் கூறினார்கள்.
அந்த வார்த்தைகள் அனைத்துமே எனக்கு மிகப்பெரிய வலியை கொடுத்தது. அது மட்டுமல்லாமல் எனது திருமண கவுனை நான் கருப்பு உடையில் மாற்றிய போது பலரும் என்னை பலவிதமாக பேசினார்கள். அதை நான் விரும்பி தான் செய்தேன். அந்த விஷயத்தை நான் மாற்றுவதற்கு முயற்சி செய்தேன்.
இதையும் படிங்க: நாளைக்கு டைவர்ஸ்!.. தனுஷுக்கு இப்படி ஒரு அட்வைஸ் தேவையா?!.. செல்வராகவன் செஞ்ச வேலைய பாருங்க!..
எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்ற காரணத்தால் ஒரு மூலையில் உட்கார்ந்து அதை பார்த்து அழ வேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் தைரியமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். இது எந்தவிதமான பழிவாங்கல் முயற்சியும் கிடையாது. நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். மிகவும் வளர்ந்து இருக்கின்றேன். நான் நம்ப முடியாத வேலையெல்லாம் செய்கின்றேன்.
எனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நான் முழுமையாக எதிர் நோக்குகிறேன்' என்று நடிகை சமந்தா பேசியிருந்தார். நடிகர் நாகசைதன்யாவுக்கு திருமணம் நடக்க இருக்கும் இந்த சமயத்தில் நடிகை சமந்தா தனது பழைய வாழ்க்கை குறித்தும், விவாகரத்து குறித்தும் பேசி இருப்பது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.