Categories: latest news

எம்மா அந்த புள்ளைக்கு கல்யாணம் ஆயிடுச்சி….! சமந்தாவிற்கு இவர் மேல ஓவர் ‘crush’ ஆம்…

தென்னிந்திய நடிகைகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு பிறகு சினிமாவில் மறு பிரவேசம் எடுத்திருக்கிறார் என்றே கூறலாம். புஷ்பா படத்தில் ’ஊ சொல்றீயா’ பாடல் மூலம் தமிழ் சினிமாவையே தன் பக்கம் திருப்ப வைத்தார். யாரும் எதிர்பாராத கெட்டப்பில் வந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

அந்த பாடல் மூலம் மீண்டும் ஏகப்பட்ட படங்களில் நடிக்க கமிட் ஆனார். காத்து வாக்குல ரெண்டு காதலில் ‘கதீஜா’ கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்க வைத்தது. அந்த படத்தில் எல்லாருடைய கவனமும் சமந்தாவின் பக்கம் தான் இருந்தது. தற்சமயம் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் ’குஷி’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட தமிழில் வந்த ரோஜா படத்தை இப்ப உள்ள தலைமுறைக்கு ஏற்ப கொண்டு வரும் நோக்கில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர் ஒரு பேட்டியில் சுவாரஸ்யமான தகவலை தெரிவித்தார். அவர் 11ஆம் வகுப்பு படிக்கும் போது தமிழில் பார்த்த முதல் படம் சூர்யா நடிப்பில் வெளியான ’காக்க காக்க’. இந்த படத்தில் சூர்யாவை பார்த்ததில் இருந்து ஒரே சூர்யாவை பற்றி தான் பேசுவாராம் அவர் தோழிகளிடம்.

கல்லூரி நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ளாத இவர் சூர்யா ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்று தெரிந்ததும் முதல் இருக்கையில் போய் அமர்ந்து விட்டாராம். இப்படி இருந்த இவர் அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தந்தது என்றி கூறினார். எல்லா பெண்களுக்கும் இருக்கிற அந்த உணர்வுதான் எனக்கும் இருந்தது சூர்யாவை பார்க்கும் போது என்று மிகவும் பூரிப்பாக. நல்ல வேளை நம்ம ஆளுக்கு அப்பவே கல்யாணம் ஆயிடுச்சி. இல்லைன்னா அவ்ளோதான்…!

Published by
Rohini