இதனால் தான் மேடையில் அழுதேன்... நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. பல்ப் கொடுத்த சமந்தா!

by Akhilan |   ( Updated:2025-05-06 04:08:09  )
இதனால் தான் மேடையில் அழுதேன்... நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. பல்ப் கொடுத்த சமந்தா!
X

samantha

Samantha: தமிழ் நடிகையாக அறிமுகம் ஆனாலும் தற்போது ஹாலிவுட் வரை பிரபலமாக இருக்கும் சமந்தா தன்னுடைய கண்ணீர் வீடியோவிற்கு பதில் தெரிவித்து இருக்கும் தகவல் வைரல் ஆகி வருகிறது.

பானா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி படங்களில் நடித்து அறிமுகமானவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தார். தொடர்ச்சியாக அவர் நடிப்புக்கு ரசிகர்களிடம் ஆதரவு கிடைக்க பல வாய்ப்புகள் குவிந்தது.

தமிழின் முன்னணி ஹீரோக்கள் அனைவருடன் இணைந்து நடித்து வந்தார். தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் தன்னுடைய ஆதிக்கத்தை சமந்தா செலுத்தி வந்த போது அங்கு பிரபலமாக இருந்த நடிகர் நாக சைதன்யா மீது காதல் வலையில் விழுந்தார்.

#image_title

இருவரும் குடும்பத்தினர் சம்பந்தத்துடன் இருமத முறைப்படி வெகு விமரிசையாக திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அடுத்த நான்கு வருடங்களில் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவிப்பை வெளியிட்டனர். இதற்கு காரணம் பல கூறப்படுகிறது.

நாக சைதன்யா தரப்பு கல்யாணத்திற்கு பின்னர் நடிகை சமந்தா நடிக்க நாகர்ஜுனா அனுமதி கொடுத்திருந்தார். ஆனால் அதை அவர் ஓவராக பயன்படுத்தி புஷ்பா படத்தில் ஐட்டம் பாடல், ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் தாராளமான கிளாமர் என அதிர்ச்சி கொடுத்தார்.

இது தான் இருவருக்கும் இடையேயான மோதலின் தொடக்கம் எனக் கூறப்படுகிறது. சமந்தா தரப்பில் பார்க்கும் போது அவருடைய கணவர் சைதன்யா திருமணத்திற்கு முன்பிருந்தே சோபிதா உடன் உறவில் இருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதனால் கணவர் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கோவத்தில்தான் சமந்தா விவாகரத்து வரை சென்றதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் கணவர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட ஜீவனாம்ச தொகை 400 கோடியை முற்றிலுமாக மறுத்தார் சமந்தா.

தற்போது சைதன்யா, சோபிதா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சமந்தா அதன் பின்னர் மியோசிட்டஸ் நோயில் பாதிக்கப்பட்டு பல வழிகளில் அவதிப்பட்ட நிகழ்வுகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. ஒரு பட விழாவில் நடிகை சமந்தா கண்ணீருடன் தன் கண்களை துடைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.

கணவரின் ஞாபகத்தால் தான் இப்படி அவர் அழுகிறார் என பல தகவல்கள் வெளிவந்தது. ஆனால் சமந்தா இதுகுறித்து விளக்கம் தந்து இருக்கிறார். அவர் கூறுகையில், நான் சோகமாக இல்லை. அதிக ஒளியை பார்த்தால் எனக்கு கண் சென்சிட்டாவாக மாறி கண்ணீர் வரும். நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story