இது செம குத்து!... அரபிக்குத்து பாட்டுக்கு சமந்தா போட்ட கெட்ட ஆட்டம் (வீடியோ)...
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இந்த பாடல் வீடியோ விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
யுடியூப்பில் வீடியோ வெளியாகி 2 நாட்களில் சுமார் 4 கோடி பேருக்கும் மேல் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். அதோடு, பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி சமூகவலைத்தளங்களில் வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.ஏற்கனவே பூஜா ஹெக்டே இந்த பாட்டுக்கு மாலத்தீவில் நடனமாடி வீடியோ வெளியிட்டுருந்தார்.
இந்நிலையில், நடிகை சமந்தா இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யவும்.
https://www.instagram.com/reel/CaFbWwihqJK/?utm_source=ig_web_copy_link