அடுத்த ஐட்டம் பாட்டுக்கு தயாரான சமந்தா.. யார் படத்தில் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த படத்தை விட பாடல் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி இந்த பாடல் மூலம் சமந்தா மேலும் பிரபலமாகி விட்டார். புஷ்பா படத்தில் நடித்த நடிகர்களைவிட ஒரு பாடலுக்கு ஆடிய சமந்தாவின் பெயர் தான் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இப்பாடலை தொடர்ந்து சமந்தாவிற்கு மேலும் பல வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தில் குத்தாட்டம் போட படக்குழுவினர் சமந்தாவை அணுகியுள்ளார்களாம். அதுவும் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் லைகர் என்ற படத்தில் தான் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட சமந்தாவை அணுகியுள்ளார்.
முதன் முறையாக பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகும் லைகர் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட சமந்தாவிடம் படத்தின் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இது உறுதியாகும் பட்சத்தில் ஊ சொல்றியா பாடலை போலவே இந்த பாடலும் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ள சமந்தா தற்போது ஒரு ஹாலிவுட் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் சமந்தா இருபாலின கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். தி ஃபேமிலி மேன் வெப் தொடருக்கு பின்னர் சமந்தாவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகமாகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.