அனைத்தும் டெலிட்: மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக மாறிய சமந்தா

Published on: October 29, 2021
samantha
---Advertisement---

‘மாஸ்க்கோவின் காவிரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானாவர் சமந்தா. இதையடுத்து பானா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா என வரிசையாக பல படங்களில் நடித்தார். இதையடுத்து விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.

தமிழைப் போலவே தெலுங்கிலும் இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இங்கும் இவர் முன்னணி நடிகையாக உள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

samantha
samantha

கடந்த சில மாதங்களாகவே சமந்தா தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக தொடர்ந்து தகவல் பரவி வந்தநிலையில் சில வாரங்களுக்கு முன் இருவரும் மனம் ஒத்து விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது ரசிகர்களை மட்டுமின்றி சினிமா உலகினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

விவாகரத்துக்குப் பின் அவரது கணவர் நாகசைதன்யா கொடுத்த ஜீவனாம்சம் 200 கோடி ரூபாய் பணத்தையும் வேண்டாம் என்று கூறிவிட்டார். விவாகரத்துக்குப் பின் சமந்தாவிற்கு பல புதிய படவாய்ப்புகள் வந்து குவிகிறது.

விவாகரத்துக்கு பின் சமூக வலைத்தளங்களில் சமந்தா அக்கினேனி என்றிருந்த தனது பெயரை சமந்தா என மாற்றினார். இந்நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த நாக சைதன்யாவின் அனைத்து படங்களையும் நீக்கிவிட்டார்.

செல்ல பிராணிகளுடன் தானும், நாக சைதன்யாவும் இருக்கும் படங்களை மட்டும் விட்டு வைத்துள்ளார். ஆனால், நாக சைதன்யா தனது சமூக வலைதள பக்கத்தில் சமந்தாவுடன் இருக்கும் புகைப்படம் எதையும் நீக்கவில்லை.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment