சமந்தா விவாகரத்து பதிவை நீக்க இதுதான் காரணமாம்....கசிந்த செய்தி....

by ராம் சுதன் |   ( Updated:2022-01-25 02:39:53  )
samantha
X

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா நட்சத்திர ஜோடி மீண்டும் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் ஒரு தகவல் ஒன்று பரவி வருகிறது. அதற்கு இரண்டு முக்கிய காரணம் உள்ளது.

ஒன்று சமந்தா சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்த விவாகரத்து அறிவிப்பு பதிவை டெலிட் செய்தது. மற்றொன்று சமீபகாலமாக நாக சைதன்யா எங்கு பேட்டி அளித்தாலும் அதில் சமந்தா குறித்தே பேசி வந்தார். அதன்படி நாக சைதன்யா அளித்த பேட்டியில், படங்களில் தனக்கு ஏற்ற ஜோடி சமந்தாதான் என்று கூறியிருந்தார்.

samantha

மேலும் பிரிவு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். அவரவர் விரும்பும் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே. அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சிறந்த முடிவாகவே இருக்கும் எனவும் கூறி இருந்தார்.

இதையெல்லாம் பார்க்கும்போது சமந்தா மற்றும் நாக சைதன்யா ஜோடி மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். நாக சைதன்யா உடன் மீண்டும் இணைய உள்ளதால் தான் சமந்தா விவாகரத்து பதிவை நீக்கினார் என்றெல்லாம் கூறப்பட்டது.

HDgallery Samantha Akkineni 1

ஆனால் உண்மையாகவே விவாகரத்து பதிவை நீக்கிய காரணமே வேறாம். அதன்படி சமந்தா தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்கள் பற்றிய பதிவுகளை இன்ஸ்டாவில் இருந்து நீக்கி வருகிறாராம். அந்த வரிசையில் தான் விவாகரத்து பதிவையும் நீக்கியுள்ளார் என கூறப்படுகிறது. எனவே இவர்கள் இருவரும் மீண்டும் சேர வாய்ப்பே இல்லையாம்.

Next Story