இவர் நிலைமை இப்படி ஆகிப்போச்சே!...ஒரு பாடலுக்கு நடனமாடும் சமந்தா...

by சிவா |
samantha
X

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தனாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், நாக சைத்தன்யாவை அவர் பிரிய முடிவெடுத்துள்ளதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது. சமீபத்தில் சமந்தா அதை உறுதி செய்தார். அதன்பின் அவரின் விவாகரத்து பற்றி பல தகவல்கள் வெளியாகியது.

ஆனால், அதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் அடுத்த வேலையை பார்க்க துவங்கிவிட்டார் சமந்தா. திரைப்படங்களில் நடிப்பது, நண்பர்களுடன் பொழுதை கழிப்பது, போட்டோஷூட்டில் கலந்து கொள்வது என பிஸியாக இருக்கிறார். ஒரு தெலுங்கு திரைப்படம், The family man இயக்குனர்களின் புதிய வெப் சீரியஸ், தமிழில் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். அப்படத்தின் இயக்குனர் சுகுமாரிடம் சமந்தாவுக்கு நல்ல நட்பு உண்டு. எனவே, இதை அவர் ஒத்துக்கொண்டார் எனக் கூறப்படுகிறது.

Next Story