‘ பொன்னியின் செல்வன்’ பட நாயகியுடன் டேட்டிங் செய்யும் சமந்தா முன்னாள் கணவர்!.. அப்போ சீக்கிரம் டும் டும் தானா?..
தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது உடல் நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வருகிறார். ஒரு நடிகை திருமணமாகி விவாகரத்து பெற்றாலே அந்த நடிகையின் மார்க்கெட் மளமளவென குறையத் தொடங்கி விடும்.
ஆனால் சமந்தாவிற்கோ ஏறுமுகமாகவே இருந்தது. இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் திருமணமான சில வருடங்களிலேயே நீதிமன்றத்தை நாடினர். அதன் பின் நடிகர் நாகசைதன்யா வேறொரு பெண்ணை திருமணம் செய்யப்போவதாக சில தகவல்கள் வலம் வந்தது.
மேலும் மருத்துவமனையில் சமந்தா அனுமதித்திருந்த போதும் நாகசைதன்யா சமந்தாவை வந்து பார்த்து ஆறுதல் கூறினார் என்றும் பல வதந்திகள் பரவியது. ஆனாலும் அது சம்பந்தமான புகைப்படங்கள் எதுவும் வெளியாக வில்லை.
இதையும் படிங்க : ஸ்ட்ரைக்கால் தள்ளிப்போன விஜய் பட ஷூட்டிங்… தடைகளை தாண்டி ஹிட் அடித்த படத்தின் சுவாரஸ்ய பின்னணி…
ஆனால் ஒரு நடிகையுடன் நாகசைதன்யா டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபிதாவுடன் நாக சைதன்யா டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இது சம்பந்தமாக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. ஆனால் அந்த புகைப்படம் இருவரும் வெளி நாடு சென்ற போது தனித்தனியாக எடுத்துக் கொண்ட புகைப்படமாம். இவர்கள் இருவரையும் இணைத்து பேசுவதற்காக மார்பிங் செய்து ஒன்றாக இருந்த மாதிரி இணைத்து வைரலாக்கி வருகின்றனராம்.
இதையும் படிங்க : “வாரிசு படத்த ஒழுங்கா தூக்கிடு”… திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டும் அஜித் ரசிகர்கள்… இந்த அளவுக்கா இறங்குறது!!
ஆனால் ஏற்கெனவே இவர்கள் இருவரையும் பற்றி இணைத்து பேசும் செய்திகள் வந்த பொழுதும் நாக சைதன்யாவும் சோபிதாவும் இதைப் பற்றி எதுவும் வாய் திறக்கவே இல்லை. அதனால் தான் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர் என்று கூறிவருகின்றனர்.