சமந்தா மட்டும் தக்காளி தொக்கா? விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்....!
இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியானது.
ஆரம்பத்தில் இந்த வீடியோ ரசிகர்களால் ரசிக்கப்பட்ட நிலையில், தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதாவது இந்த வீடியோவில் நடிகை நயன்தாரா புடவை அணிந்து நடனமாடி உள்ளார். ஆனால் நடிகை சமந்தாவோ அரைகுறை ஆடையுடன் அதிக கவர்ச்சியில் குத்தாட்டம் போடுவது போல் உள்ளது.
தற்போது இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் தனது காதலிக்கு மட்டும் கண்ணியமாக புடவையை கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன் சமந்தாவுக்கு மட்டும் கிளாமரான காஸ்டியூம் கொடுத்துள்ளார் என தாறுமாறாக விக்னேஷ் சிவனை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவருமே தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகள் தான். அதிலும் சமந்தா தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகை. இப்படி உள்ள நிலையில் காஸ்ட்யூம் விஷயத்தில் தனது காதலி என்பதால் விக்னேஷ் சிவன் ஒருதலை பட்சமாக யோசித்துள்ளார் என பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.