Categories: Cinema News latest news

என் முகத்தை கூட காட்ட முடியவில்லை!.. இன்ஸ்டா லைவில் சமந்தா வேதனை…

Actress Samantha: சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சமந்தா. மாஸ்கோவின் காவேரி என்கிற படத்தில் அறிமுகமாகி கடந்த 13 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். படிப்படியாக உயர்ந்து இப்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார்.

தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்த நடிகை இவர். அப்படி நடிக்கும்போது நாகார்ஜூனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால், சில வருடங்களில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டது.

இதையும் படிங்க: விஜய் இல்ல எனக்கு அஜித் தான்… ஆதிக் பலே கில்லாடிப்பா! அடிச்சா சிக்ஸர் தான் இனி!

சமந்தா – நாக சைத்தன்யா விவாகரத்து ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. சமந்தாவை பற்றி பல தவறான செய்திகளையும் சிலர் பரப்பினார்கள். ஆனால், பொறுமையாக அதை கையாண்டார் சமந்தா. சினிமாவில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி அதிலிருந்து மீண்டார். அதோடு, அவ்வப்போது நண்பர்களுடன் வெளிநாடு சுற்றுலா சென்றும் ரிலாக்ஸ் செய்து வருகிறார்.

சமீபத்தில் விஜய தேவரகொண்டாவுடன் நடித்த குஷி படம் வெளியானது. இப்படத்தின் புரமோஷன் விழாவில் இருவரும் காட்டிய நெருக்கத்தை பார்த்து இருவரும் காதலிக்கிறார்களா என்கிற சந்தேகமே வந்தது. மேலும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதையும் படிங்க: அஜித் படத்தில் நான் சொன்ன ஐடியாலாஜி! 7ஜி நாயகன் கொடுத்த சர்ப்ரைஸ் – ஹிட்டுக்கு காரணமே இவர்தானா?

ஒருபக்கம், சமந்தா மயோசிடிஸ் எனும் சரும நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த சில வருடங்களாக இதற்கு சிகிச்சையும் எடுத்து வருகிறார். இது குணப்படுத்த முடியாத நோய் எனவும் சொல்லப்படுகிறது. இது சமந்தாவின் மனதில் தீராத சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று இன்ஸாகிராம் லைவில் ரசிகர்களுடன் பேசிய சமந்தா ‘மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் அதிகளவில் ஸ்டீராய்டு எடுத்து கொள்கிறேன். இதனால் என் முகத்தை கூட காட்ட முடியாமல் ஃபில்டர்களை பயன்படுத்தி வருகிறேன்’ என சோகமாக பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தலைகீழாக தான் குதிப்பேன்!… தீபாவளி ரேஸில் இணைந்த விக்ரம்… இப்போ இந்த விபரீத முயற்சி தேவையா?

Published by
சிவா