கதையா விடுறீங்க...இப்போ யூடியூப் சேனல்களுக்கு சமந்தா வச்சாங்க பாரு ஆப்பு

by adminram |
samantha
X

தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் சமந்தா.

கடந்த சில மாதங்களாகவே நாகசைதன்யா, சமந்தா இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக கடந்த மூன்று மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது.

samantha
samantha

இதுகுறித்து ஏதும் பேசாமல் இருந்துவந்த சமந்தா கடந்த மாதம் இறுதியில் தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இந்த செய்தி நாகார்ஜுனா மற்றும் சமந்தாவின் குடும்பத்தை சோகத்தில் தள்ளியது.

விவாகரத்துக்குப் பின்னர் சமூக வலைத்தளங்களில் சமந்தா அக்கினேனி என்றிருந்த தனது பெயரை சமந்தா என மாற்றினார். சமந்தா கவர்ச்சியாக நடிப்பதே விவாகரத்திற்கு காரணம் என்றும், வேறு பல காரணங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

samantha
samantha

இந்நிலையில், இந்த விவகாரத்து விவாகரத்தில் தன்னைப் பற்றி அவதூறு தகவல்களை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது சமீபத்தில் சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தனக்கு பிற ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக தவறாக பேசிய வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனால், இதுவரை சமந்தா பற்றி அவதூறு பரப்பிவந்த யூடியூப் சேனல்கள் தற்போது அமைதிகாத்து வருகின்றன. சமந்தா தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

Next Story