நீ இல்லைன்னா என்ன..? இது போதும்..சமந்தாவிற்காக நடிகர் பண்ண அந்த செயல்..
சமந்தா தெலுங்கில் யசோதா படத்தில் நடித்து கொஞ்சம் பிரேக் எடுத்து துபாய்க்கு விடுமுறை கொண்டாட சென்றுள்ளார். அவர் துபாய் போனாலும் அவரின் நினைப்பு முழுவதும் சென்னையில் தான் உள்ளதாம். ஏனெனில் இந்த மாதம் இறுதியில் அவரும் விஜய்சேதுபதியும் இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாக உள்ளது.
அந்த படத்தில் ரிசல்ட் எப்படி வரும் என்ற நினைப்பில் இருக்கிறாராம். இந்த நிலையில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் யசோதா படம் முடிந்தவுடன் விஜய்தேவர்கொண்டா உடன் ஜோடி சேர உள்ளார். அந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. ஆனால் சமந்தா துபாயில் இருப்பதால் அவரால் பங்கு பெறமுடியவில்லை.அவர் மட்டுமில்லாமல் படத்தின் ஒரு சில நடிகர்களும் பங்கு பெற முடியவில்லை.
இதனால் வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் விஜய்தேவர்கொண்டா பூஜையில் எடுத்த புகைப்படங்களில்
கொஞ்சம் மார்ஃபிங் செய்து அதில் சமந்தா மற்றும் அந்த நடிகர்கள் இருக்கிற மாதிரி புகைப்படத்தை மாற்றியுள்ளார். மேலும் அவர் இதனை ட்விட்டரில் பதிவிட்டு தயவுசெய்து மீடியா நண்பர்கள் இந்த புகைப்படத்தை செய்திகளுக்கு பகிருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை அறிந்து சமந்தா மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்தார். இதற்கு முன் சமந்தா மற்றும் விஜய்தேவர்கொண்டா இருவரும் நடிகர் திலகம் படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது இவர்கள் இணையும் இரண்டாவது படம்.