நடிகைக்கு நல்ல காலம் பொறந்துடுச்சு.... சர்ச்சைக்குரிய படத்திற்கு சமந்தா பெற்ற விருது..!
சர்ச்சைக்குரிய வெப் சீரிஸில் நடித்த சமந்தாவுக்கு விருது !
நடிகை சமந்தா அண்மையில் தி பேமிலி மேன் என்ற வெப் தொடரில் சர்ச்சையான காட்சிகளில் துணிந்து நடித்திருந்தார். ஆபாச காட்சிகள் பல அடங்கிய இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரேம் வீடியோவில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் இந்த தொடரில் மிகச்சிறப்பாக நடித்ததற்காகா சமந்தாவுக்கு பிலிம்பேர் விருது கிடைத்துள்ளது. விருது பெற்ற சமந்தா கூறியதாவது, எனக்கு வாக்களித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. இன்று என்னை மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக மாற்றியுள்ளீர்கள். என்னை நம்பியதற்கும், அற்புதமான மனிதர்களாக இருப்பதற்கும் நன்றி. ராஜி கேரக்ட்டரை எனக்கு கொடுத்த இயக்குனருக்கும் அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனத்திற்கும் மிக்க நன்றி.
இதையும் படியுங்கள்: வேற லெவலில் சிம்பு!.. வெந்து தணிந்தது காடு டீசர் வீடியோ…
இது எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் இது. இந்த கேரக்டரின் ஒவ்வொரு வசனமும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. மற்றும் எனக்கு நடிக்க உதவிய மனோஜ் பாஜ்பாய் சாருக்கு நன்றி. உங்களைப் போன்ற நடிகர்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள் உங்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நீங்கள் இல்லாமல் இந்த விருது கிடைத்திருக்காது என கூறி ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு நன்றி கூறியுள்ளார்.