என் வேலை ஈசியா போச்சு!.. நயன் surrogacy விஷயத்தால் பலனடைந்த சமந்தா!..என்னம்மா சொல்ற?..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா. ஏற்கெனவே லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன் இப்பொழுது இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி தன் குடும்பத்தில் பிஸியாக இருக்கிறார்.
நடிகை சமந்தா ஒரு பிரேக்கிற்கு அப்புறம் யாராலும் தொட முடியாத இடத்தில் உச்சத்தில் இருக்கும் நடிகையாக இருக்கிறார். இதற்கு காரணமே புஷ்பா படத்தில் அமைந்த ஊ சொல்றீயா பாடலுக்கு அவர் ஆடிய நடனமாகும்.
இதையும் படிங்க : “இதெல்லாம் ஒரு படமா??” தனுஷை கரித்துக்கொட்டிய சரண்யா… ஆனால் டப்பிங்கில் என்ன ஆச்சு தெரியுமா??
இந்த நிலையில் இவரின் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் யசோதா திரைப்படம். 5 மொழிகளில் தயாராகி இருக்கும் யசோதா திரைப்படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக வரவிருக்கிறது. பெண்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த படத்தில் surrogacy சம்பந்தமான கதைக்கும் முக்கியத்துவம் இருக்கிறது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் சமந்தா தெரிவித்தார்.
surrogacy என்ற வார்த்தையை யாராலும் மறந்திருக்க முடியாது. நயன் விக்கி இந்த சர்ச்சையில் சிக்கி படாத பாடு பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதை பற்றி சமந்தாவிடம் கேட்கும் போது நயன் விக்கி பிரச்சினையால் தான் இந்த படத்தில் அந்த கதை அமைந்ததா என்று கேட்கும் போது ‘ இல்ல இல்ல அவர்கள் பிரச்சினைக்கு முன்பாகவே இந்த படம் எடுத்தாகிவிட்டது. ஆனால் அவர்களால் எனக்கு ஒரு free marketing கிடைத்துவிட்டது. எனக்கு சுலபமாக போய்விட்டது’ என்று கூறினார். ஏனெனில் surrogacy என்று சில பேருக்கு தெரியாமல் இருந்த நிலையில் நயன் விஷயத்தால் இப்பொழுது ஓரளவுக்கு அதை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் எழுந்திருக்கும். அந்த வகையில் யசோதா படம் பார்க்க வருபவர்களுக்கும் ஒரு விதத்தில் இது எளிதாக இருக்கும் என்ற விதத்தில் சமந்தா கூறியிருக்கிறார்.