ஹலோ ஹஸ்பெண்ட் இல்லை...! நாகசைதன்யாவை பற்றி பேசுகையில் கோபப்பட்ட சமந்தா...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பிறகு நல்ல ஒரு ரீஎன்ரி கொடுத்து மக்கள் மத்தியில் கெத்தாக உட்கார்ந்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். புஷ்பா படத்தின் ஒரு பாடல் என்றாலும் அதில் நடனம் ஆடி எல்லாரையும் ஆட்டம் போட வைத்தார்.
அதன் பின் தொடர்ந்து பல படங்களின் வாய்ப்பு எப்பொழுதும் பிஸியாக சுற்றிக் கொண்டு இருக்கும் நடிகையாக மாறிவிட்டார். மேலும் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஹிந்தியில் பிரபலமான தொடராக இருக்கும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அக்ஷய் குமாருடன் இணைந்து பங்கேற்றார். அப்போது அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சமந்தாவிடம் நாகசைதன்யாவை பற்றி கேட்கையில் அவர்களது விவாகரத்து பற்றி நீங்களும் உங்கள் கணவரும் என்று ஆரம்பிக்க
சட்டென சமந்தா முறைத்து கணவரா? என்று ஒரு மாதிரி கேட்க உடனே தொகுப்பாளர் மன்னிப்பு கேட்டு விட்டு முன்னாள் கணவர் என ஆரம்பித்தார். ஆனால் இதே நிகழ்வு நாகசைதன்யாவிடமும் அரங்கேறியிருக்கிறது. திரையில் உங்களுக்கு சரியான ஜோடி என்றால் யாரை சொல்வீர்கள் என கேட்க நாகு சாய்பல்லவி மற்றும் சமந்தா என பெருந்தன்மையாக கூறியிருக்கிறார்.