ட்ரெண்டிங்கில் சமந்தாவின் ஐட்டம் பாடல் – ஆத்தாடி எக்ஸ்பிரஷன்லாம் ஒரு மார்க்கமா இருக்கே!

Published on: December 11, 2021
samantha
---Advertisement---

சமந்தாவின் புஷ்பா பட பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

தெங்கு சினிமாவில் தளபதி விஜய் ரேஞ்சுக்கு ரசிகர்களின் பேவரைட் ஸ்டைலிஷ் ஹீரோவாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இவர் தன்னுடைய சூப்பர் ஹிட் படமான ரங்கஸ்தலம் படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கும் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் ஃபஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் இப்படத்தில் சமந்தா சிறப்பு பாடலுக்கு அல்லு அர்ஜூனுடன் நடனம் ஆடியுள்ளார்.

இதையும் படியுங்கள்: இவ்ளோ நாள் கோமால இருந்தீங்களா?.. ஷங்கரை கலாய்க்கும் நெட்டிசன்கள்…

ஓ ஆண்டாவா..ஓஓஓ ஆண்டாவா என தொடங்கும் இப்பாடலின் லிரிக் வீடியோ நேற்று யூடியூபில் வெளியாகி பட்டய கிளப்பியது. இன்று இந்த பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் 4வது இடத்தை பிடித்துள்ளது. இதோ அந்த பாடல் வீடியோ..

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment