More
Categories: Cinema News latest news

விஜய் படத்தில் சமந்தாவுக்கு இப்படி ஒரு வேடமா?…லோகேஷ் கனகராஜ் இது அடுக்குமா?…

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியிருந்தாலும் விக்ரம் திரைப்படத்தின் வெற்றி லோகேஷ் கனகராஜை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. அவரின் திரைப்படங்கள் ‘லோகேஷ் யூனிவர்ஸ்’ என ரசிகர்கள் பேச துவங்கியுள்ளனர். விக்ரம் திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Advertising
Advertising

அடுத்து மீண்டும் விஜயை வைத்து ஒரு புதிய படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய் தற்போது நடித்து வரும் ‘வாரிசு’ படம் முடிந்த பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது விஜயின் 67வது திரைப்படமாகும்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை சமந்தா வில்லியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. சமந்தா இதுவரை எந்த படத்திலும் வில்லியாக நடித்தது கிடையாது. எனவே, தளபதி 67 திரைப்படம் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
சிவா

Recent Posts