நாக சைதன்யா இல்லைனா என்ன? நான் இருக்கேன்.. புரபோஸ் செய்த ரசிகருக்கு சமந்தா கொடுத்த ரிப்ளே

by Rohini |   ( Updated:2024-08-11 05:33:51  )
samantha (1)
X

samantha (1)

Actress Samantha: தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிப் படங்களில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பெரிய பெரிய விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் சமந்தா.

கடந்த 8 ஆம் தேதி சமந்தாவின் முன்னாள் கணவரான நாகசைதன்யாவிற்கு நடிகை சோபிதாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அது சம்பந்தமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. அதே நேரத்தில் சமந்தாவின் ரசிகர்கள் சமந்தாவிற்காக குரல் கொடுத்தனர்.

இது ஒரு வகையில் சமந்தாவின் மார்கெட்டை இன்னும் அதிகளவு உயர்த்தியது என்று சொல்லலாம். 2017 ஆம் ஆண்டு சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் கோலாகலமாக நடக்க திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.

ஆனால் அந்த திருமணம் மூன்று ஆண்டுகளில் முடிவடையும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு சமந்தா படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார். முன்பு இருந்த கிரேஸை விட விவாகரத்துக்கு பிறகு சமந்தாவின் கிரேஸ் உயர்ந்தது.

இந்த நிலையில்தான் சமந்தா நாக சைதன்யாவிற்கு ப்ரபோஸ் செய்த அதே நாளில் நாக சைதன்யாவிற்கும் சோபிதாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இது சமந்தாவை கடுப்பேற்றவே நாக சைதன்யா இந்த நிச்சயதார்த்தை இந்த தேதியில் வைத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நாக சைதன்யா நிச்சயதார்த்தம் நடந்த அதே நாளில் சமந்தாவிற்கு ஒரு ரசிகர் ப்ரபோஸ் செய்த செய்தி இணையத்தில் தீயாய் பரவுகிறது. அதாவது நாக சைதன்யா இல்லை என்று வருத்தப்படாதீர்கள் சமந்தா. நான் இருக்கிறேன். நம்ம ஜோடி அற்புதமான ஜோடி. உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயார்.

samantha

samantha

இன்னும் இரண்டு வருடங்களில் நான் பெரிய அளவில் சம்பாதித்து உங்களை தேடி வருகிறேன் என்றெல்லாம் ப்ரபோஸ் செய்திருக்கிறார். இதை பார்த்து சமந்தா கொடுத்த ரிப்ளேதான் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறது. அந்த ரசிகரின் பின்னாடி ஒரு ஜிம் புகைப்படம் இருந்தது. அதை குறிப்பிட்டு சமந்தா ‘பின்னாடி இருக்கும் அந்த ஜிம் தான் என்னை சமாதானப்படுத்துகிறது’ என கூறியிருக்கிறார்.

Next Story