Cinema News
தீவிரமாகும் நோயின் தாக்கம்! கடல் கடந்து செல்ல தயாராகும் சமந்தா – பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
தென்னிந்தியாவிலேயே ஒரு பலம் வாய்ந்த முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற பழமொழிகளில் நடித்து வரும் சமந்தா இப்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கின்றன.
சமந்தாவிற்கு என்று ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். குறிப்பாக அவர் துவண்டு போன நேரத்தில் சமந்தாவிற்கு ஆறுதலாக இருந்தவர்கள் அவருடைய ரசிகர்கள் மட்டும்தான் என பல நேரங்களில் தனது சோசியல் மீடியாக்களில் சமந்தா பகிர்ந்திருக்கிறார். திருமணம் ஆனதிலிருந்தே பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சமந்தா இப்போது கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்பட்டு கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க : எனக்கு பிடிக்கல! தொடர்ந்து ரஜினியின் 4 படங்களில் நடிக்க மறுத்த நளினி – ஏம்மா அப்படி என்னதான் பிரச்சினை?
மயோசிட்டிஸ் என்ற தோல் நோயினால் அவதிப்பட்டு வந்த சமந்தா இடையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டும் நடித்தார். அவர் நடித்து வந்த படங்களின் ப்ரமோஷன் விழாக்களில் கலந்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கும் படங்களுக்கும் டப்பிங் வேலையையும் மேற்கொண்டு வந்தார். ஐயோ இந்த வகை அரிய நோயினால் பாதிக்கப்பட்டு விட்டோமே என எண்ணிக்கொண்டு படுத்தே கிடந்தால் வேலைக்கு ஆகாது. எதையும் எதிர்கொள்ளும் மன தைரியம் வேண்டும் என்ற பக்குவத்தை மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.அதற்கு தக்க உதாரணமாக இருந்தவர் சமந்தா.
என்னதான் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் இருந்தாலும் அந்த நோய் அதனுடைய தீவிரத்தை காட்டத்தான் செய்யும். இப்பொழுது மீண்டும் அந்த நோய் அதிகமாக தன்னுடைய தீவிரத்தை காட்டுவதால் ஒரு வருடத்திற்கு அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறாராம். அதனால் சினிமாவிற்கு ஒரு வருடம் பிரேக் எடுத்திருப்பதாகவும் அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் மூலம் செய்திகள் வெளி வந்தன. அதற்கான சிகிச்சைகளை அமெரிக்கா அல்லது தென்கொரியா போன்ற நாடுகளுக்கு சென்று மேற்கொள்வதாகவும் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க : நடிப்பதை தவிர்த்து வேறு தொழில் செய்யும் ஐந்து நடிகைகள்!.. இந்தத் தொழிலையுமா செய்றாங்க!..
இதை அறிந்த ரசிகர்கள் நடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் குணமாகி நல்ல முறையில் திரும்பி வரவேண்டும் என இறைவனிடம் வேண்டுவதாகவும் செய்திகள் உலா வந்து கொண்டு இருக்கின்றன.