கெட்ட வார்த்தை டீ-ஷர்ட்.! வெறுப்பேற்றிய சமந்தா.! கொந்தளித்த குடும்பம்.!
சினிமாக்களில் காதல் ஜோடிகளாக வலம் வந்து பின்னர், நிஜ வாழ்விலும் காதல் பறவைகள் சிறகடித்துப் பறந்து பின்னர், திருமணம் செய்து கொண்டு அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது சினிமா வட்டாரத்தில் தொடர் கதையாக மாறி வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் இடம் பிடித்த இளம் ஜோடிகள் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆவர்.
சில வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இருவரும் இணைந்து தங்கள் மண வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் ஏதோ காரணத்தினால் சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.
இதனால், தற்போது சுதந்திரப் பறவையாக சுற்றி வருகிறார். நடிகை சமந்தா புஷ்பா படத்தில் "Oo Solriya Mama" எனும் பாடலுக்கு ரசிகர்கள் மயங்கும் அளவிற்கு குத்தாட்டம் போட்டார். அதன் பின்னர், அவ்வப்போது இணைய தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.
இவர் அண்மையில், டீ சர்ட் போட்டு நடமாடினார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், அந்த டி ஷர்ட்டில் முழுக்க கெட்ட வார்த்தைகளால் நிரம்பியிருந்தது. F-ல் ஆரமிப்பிற்கும் கெட்ட வார்த்தை எனப்படும் அந்த நான்கு எழுத்து வார்த்தை அதில் அதிகமாக பயன்படுத்தப் பட்டிருந்தது.
இதையும் படியுங்களேன்-மீண்டும் மருதநாயகமா?! இருந்தாலும் கமலுக்கு தைரியம் அதிகம் தான்.!
சமந்தா ஏன் இவ்வாறு செய்கிறார் என்று பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வந்தனர். ஒரு தரப்பு அவர் தனது மாமனார் குடும்பம் ஆன நாகார்ஜுனா குடும்பத்தை வெறுப்பேற்ற இந்த மாதிரி செய்து வருகிறார் என்று குறிப்பிடுகின்றனர். பலர் அவர் குணமே அப்படித்தான் என சிலாகிக்கின்றனர்.
எது எப்படியோ பொது இடஙக்ளில் பிரபலங்கள் இந்த மாதிரியான வாசகங்கள் அடங்கிய பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது பலரின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. அதனை பார்த்து சிலர் பின்பற்றக் கூடும் என்பதால் அதனை தவிர்ப்பது நல்லது.