Connect with us
samantha

Cinema News

சினிமா நடிகையின் உயிரை காப்பாற்றிய சமந்தா.. நிஜமாவே உங்களுக்கு தங்க மனசுதான்!

சென்னை பல்லாவரத்தில் பிறந்து அதன்பின் சினிமாவில் நுழைந்து தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழில் அதர்வாவுடன் பானா காத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இதன்பிறகு இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். வளர்ந்துவரும் நடிகையாக இருந்தபோது காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இவர் முன்னணி நடிகையாக இருந்தபோது கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு பிரபல நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

நான்கு ஆண்டுகாலம் ஒன்றாக குடும்பம் நடத்திவந்த இவர்கள் கடந்த மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார் சமந்தா.தற்போது இவர் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதுதவிர மேலும் இரண்டு பெயரிடப்படாத படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், ஹிந்திப்படங்களில் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இவர் தெலுங்கில் சக நடிகையின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார்..

Tejaswi Madivada

Tejaswi Madivada

தெலுங்கில் நடிகையாகவும், குணசித்திர நடிகையாகவும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை தேஜஸ்வி மடிவாடா. இவர் தமிழில் நட்பதிகாரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இவரது அறுவைசிகிச்சைக்கு சமந்தா உதவியுள்ளார்.

இதுகுறித்து தேஜஸ்வி பேசியதாவது, நான் சிறுவயதிலே ஏனாதி தாயை இழந்தேன். எனது தந்தையும் குடிபோதைக்கு ஆளானதால் தனியாகவே வளர்ந்தேன். சினிமாவில் நுழைந்தபின்னும் அங்கும் பல கஷ்டங்களை அனுபவித்தேன்.அதன் பின்னரே எனக்கு ஓரளவிற்கு பட வாய்ப்புகள் அமைந்தது.

இந்த நிலையில்தான் என்னை டிபி தாக்கியது. அறுவை சிகிச்சை செய்வதற்கு கூட பணமில்லாமல் கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில்தான் நடிகை சமந்தா பெரியமானதுடன் அனைத்து செலவையும் அவரே ஏற்று எனக்கு அறுவை சிகிச்சை செய்துவைத்து என்னை காப்பற்றியுள்ளார்’ என கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top